பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

ஜபர் உல் தாரீக் என்ற ஓர் அராபியத் தளபதி வட ஆப்பிரிக்காவை வட்டமிட்டு, இன்று ஜிப்ரால்டர் நீரிணைப்பு என வழங்கும் இடத்தை அடைந்து, அங்கிருந்து ஸ்பெயின் நாட்டிலும் புகுந்து அதைக் கைப்பற்றினான். அவன் கடந்து வந்த நீரிணைப்புக்கு ஜிப்ரால்டர் நீரிணைப்பு என இன்றும் அவனுடைய பெயரே மருவி வழங்குகிறது. ஸ்பெயின் நாட்டின் தென்பகுதியில் 15 ஆம் நூற்றாண்டின் இறுதி வரையில் இசுலாமியர் ஆட்சி நிலைத்திருந்தது.

இவ்வாறு உலகமே நடுங்கப் போர் முரசு கொட்டிய அராபியர்களின் கவனத்தை இந்தியப் பெருநிலம் ஈர்த்தது. இந்திய நாடு பரந்த ஒரு துணைக்கண்டம். இமயம் முதல் குமரிவரை எல்லாச் செல்வமும் ஒருங்கே அமையப் பெற்ற இணையற்ற பெருநிலம். புனிதக் கங்கையும், சீறிப் பாயும் சிந்துப் பேராறும், நல்வளம் கொழிக்கும் நருமதையும், வான் பொய்ப்பினும் தான் பொய்யா வளமிக்க காவிரியும் ஓடி வளப்படுத்தும் வளநாடு இந் நாவலந்தீவு. முத்தும் பவளமும் அகிலும் தேக்கும் நெல்லும் கரும்பும் தமிழகத்திலுண்டு. குறையாத கோதுமை வளம் சிந்து, கங்கைச் சமவெளியில் உண்டு. மேருமலையில் மணியுண்டு. இங்கிருப்பது போன்ற வளமிக்க பெருஞ் சமவெளிகளை வேறெங்கும் காண்பது அருமை.

இந்திய நாட்டின் செல்வ வளம் அராபியரின் செவிகளுக்கு எட்டியது. அச்செல்வத்தை விட்டு