பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

மாமூதின் நோக்கம் இந்திய நாட்டில் இசுலாமியப் பேரரசை நிறுவ வேண்டும் என்பதன்று. பொன் விளையும் பூமியான இந்திய நாட்டின் செல்வம் எல்லாவற்றையும் அடியோடு சுரண்டிக் கொண்டு போய்த் தன் நாட்டில் குவிக்க வேண்டும் என்பதுதான். மேலும் இசுலாமிய சமயத்தை இந்திய நாட்டில் பரப்ப வேண்டுமென்றும் இவன் நினைத்தான்; இந்திய நாட்டில் உள்ள கோவில்களையெல்லாம் இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டு, எங்கும் மசூதிகளை எழுப்ப வேண்டுமென்று நினைத்தான்; இந்திய நாட்டின்மீது பதினேழு முறை படையெடுத்தான்; ஒவ்வொரு முறையும் குதிரைகளின் மீதும், ஒட்டகங்கள் மீதும் இந்திய நாட்டின் செல்வத்தை வாரி மூட்டை கட்டிக்கொண்டு சென்றான்.

பெஷாவர், மூல்தான், நாகர்கட், படிண்டா , நாராயணபுரம், தானேசுவரம், மதுரா, சோமதநாதபுரம் ஆகிய பட்டணங்களை மாமூது கொள்ளையடித்தான்; கோவிற் சிலைகளைச் சுக்கு நூறாக்கினான்; இந்திய நாட்டிலிருந்து எடுத்துச் சென்ற செல்வத்தைக் கொண்டு தன் தலைநகரான கஜ்னியை அழகு படுத்தினான்; அங்குப் பல்கலைக்கழகத்தையும், நூல் நிலையங்களையும் நிறுவினான்; பிர்தௌசி, அல்பெரூனி முதலிய கவிஞர்களை ஆதரித்தான். ஆனால் இந்திய நாட்டில் பேரரசை நிறுவ அவனால் முடியவில்லை.

கி. பி. 12 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கோரியிலிருந்து புறப்பட்ட முகம்மது என்ற மன்-