பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75

னன் வடஇந்தியாவில் சிறப்புடன் ஆட்சி புரிந்து கொண்டிருந்த இராசபுத்திர மன்னனாகிய பிருதிவியைத் தோற்கடித்து விட்டு இசுலாமியப் பேரரசை டில்லியில் நிறுவினான். ஆனால் அவனும் சில ஆண்டுகளில் கொலையுண்டு இறந்தான். இவ்வாறு இசுலாமியர்கள் பலமுறை இந்திய நாட்டின்மீது படையெடுத்தும் யாராலும் நிலைத்த ஓர் அரசியலை உருவாக்க முடியவில்லை.

இந்திய நாட்டில் முகம்மது கோரி துவக்கி வைத்த இசுலாமிய அரசு என்னும் அடிப்படையின் மீது, பேரரசு என்னும் பெருமாளிகையை எழுப்பிய பெருமை, அவனுடைய அடிமை ஒருவனையே சாரும். அவன்தான் குத்புதீன். முகம்மது கோரியிடம் இவன் அடிமையாகப் பணி செய்தவன்; தன் உழைப்பாலும் அறிவாற்றலாலும் கோரியின் நன் மதிப்பைப் பெற்றுப் படிப்படியாக உயர்ந்து, இறுதியில் அவன் முழு நம்பிக்கைக்கும் அன்புக்கும் உரியவனாக மாறிவிட்டான்.

கோரி கி.பி. 1206 ஆம் ஆண்டில் இறந்ததும், இந்திய நாட்டில் அவன் வென்ற பகுதிகளுக்குக் குத்புதீன் மன்னன் ஆனான்; மேலும் பல பகுதிகளை வென்று, தன் ஆட்சியின் எல்லையை விரிவுபடுத்திக் கொண்டான்; வலிமை மிக்க ஆட்சியை இந்திய நாட்டில் வேரூன்றுமாறு செய்து விட்டான். எட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில், இந்திய நாட்டை வென்று ஒரு பேரரசை நிறுவ வேண்டும் என்று எண்ணி முயன்ற அராபியரின் முயற்சி ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின் குத்புதீனால்