பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


76 முற்றுப் பெற்றது. தன் முன்னேரால் சாதிக்க முடியாத பெருஞ்செயலைச் சாதித்து முடித்த குத்புதீன் அவ்வெற்றிப் புகழ் என்றும் நிலைத் திருக்குமாறு செய்ய விரும்பின்ை. அவ்விருப் பத்தின் விளைவாக எழுந்த வெற்றிச் சின்னமே குதுப்மினர். குதுப்மினர் உலகிலேயே மிக உயர்ந்த கோபுர மென்று நாம் கண்டோம். இதன் உச்சியில் ஏறி நிற்கும் ஒருவன் உரக்கக் கூவில்ைகூட, இதன் அடியில் நிற்பவனின் காதில் அச்சத்தம் விழாது. இவ்வுயர்ந்த கோபுரத்தை வெற்றியின் சின்னமாகத் தான் குத்புதீன் எழுப்பின்ை என்பதற்கு வேறு சில சான்றுகளும் உண்டு. இந்திய நாட்டைப் பதினேழு முறை கொள்ளையடித்துச் சென்ற கஜ்னி மாமூது, தன் தலைநகரான கஜ்னி மாநகரில் இதைப் போன்றே, ஒரு கோபுரத்தைத் தன் வெற்றியின் சின்னமாக எழுப்பினன். கோரி முகம்மதுவும் வெற்றிச் சின்னமாகக் கோரி நகரில் ஒரு கோபு ரத்தை எழுப்பினன். தன் முன்னேர்களைப் பின் பற்றிக் குத்புதீனும் டில்லியில் குதுப்மினரை எழுப்பி யிருக்கவேண்டும். - கோரி முகம்மது டில்லியைக் கைப்பற்றுவதற்கு முன்பாக இப்பெரு நகரில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த இராசபுத்திர வீரன் பிருதிவி. அவனே அல்லது அவன் மாமனை விக்கிரக ராஜாவோ, தோமார் இராசபுத்திரர்களிடமிருந்து டில்லியைக் கைப்பற்றிய அவ்வெற்றியின் சின்னமாக இக்கோபு ரத்தை எழுப்பி யிருக்கலாம் என்று சில வரலாற்