பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


80 வேண்டும். இவ்வுச்சியில் நிற்போருக்குச் செங் கோட்டையின் வெளிப் புறச் சுவர்கள் தென்படும்; டில்லி நெடுஞ்சாலை ஆறு கிடந்தாற்போல் அகன்று செல்வதைக் காணலாம் ; இடப் புறத்தில் ஆஸ்காஸ் மாளிகைகளையும், வலப்புறத்தில் ஜகன்பன்ன, சிரி ஆகியவற்றின் சுவர்களையும் காணலாம். (ஜகன்பன்ன என்ற இடம், முகம்மது துக்ளக் என்பவனல் கட்டப்பட்ட கோட்டை, சிரி, அலாவுத்தீன் கில்ஜியால் கட்டப்பட்ட கோட்டை. அவைகள் யாவும் சிதைந்து, அழிவுச் சின்னங் களாகவே இன்று காணப்படுகின்றன.) இவ்வுச்சியின் மேல் ஏறி நின்றுதான்,துக்ளக் அரசர்களும், கில்ஜி மன்னர்களும், முரட்டு மொக லாயர்கள் டில்லி நகரைச் சூறையாடிய கொடிய காட்சியைக் கண்ணுல் கண்டனர். தைமூரின் படை வெள்ளம், இப்போதுள்ள வில்லிங்டன் விமான நிலையத்தில் பாசறை அமைத்துத் தங்கியிருந்த காட்சியை, முகம்மது துக்ளக் இவ்வுச்சியில் ஏறி நின்றுதான் கண்டான். இவ்வுச்சியில் நின்ற வண்ணம் நம் பார்வை யைச் சற்றுத் தொலைவில் செலுத்தில்ை ஒரு பக்கத் தில் துக்ளகாபாத்தின் சுவர்களையும், மறு பக்கத் தில் பழங்கோட்டை (புராண கிலா) யையும், உமாயூனுடைய சமாதியையும் காணலாம். உமா யூனுடைய சமாதியின் மேல் நம் கண் பார்வை மோதியவுடன் தம்மையறியாமல் நம் உணர்ச்சி சிலிர்ப்படையும். மொகலாயர்களின் மிக்க அழகிய