பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


83 ஆட்சியை மொகலாயர்களின் பொற்காலம் என்று சொல்லுவர். அவன் காலத்தில் அரண்மனைக் கரு ஆலத்தில் பொன்னும் மணியும் மலைபோலக் குவிந்து கிடந்தன. டில்லிப் பெருநகரம் அவன் கைவண்ணத்துக்காகக் காத்துக்கிடந்தது. இந் நகருக்குள் காலடி எடுத்து வைப்பவர் ஒவ்வொரு வரும் காண விரும்புவது செங்கோட்டையைத்தான். இக்கோட்டையை எழுப்பிய பெரு மன்னன் வடிாஜகானே. இக்காலத்தில் இதைச் செங்கோட்டை என்று வழங்குகின்றனர். ஷாஜகான் காலத்தில் இது உருது - இ - முஅல்லா என்ற பெயரால் வழங்கப் பட்டது. ஷாஜகானுக்குப் பிறகு ஆண்ட மொக லாய மன்னர்கள் பெருமைக்குரிய பெருங் கோட்டை ‘ என்ற பெயரால் இதை அழைத்தனர். இந்தியாவில் பல இடங்களில் உள்ள மன்னர் களுடைய அரண்மனைகளைவிடச் செங்கோட்டை பேரழகோடு விளங்குகிறது. குறிப்பாகச் சொல்லப் போனல், இந்திய நாட்டிலேயே செங்கோட்டைக்கு ஒப்பான பெருமாளிகையை எங்கும் காண முடி யாது. இது கோட்டைக்குக் கோட்டையாகவும், அரண்மனைக்கு அரண்மனையாகவும் விளங்கியது. திவானி ஆம், திவானி காஸ், ஜெனை, ரங்மகல் முதலிய மாளிகைகள் செங்கோட்டையில் அடங்கிய பகுதி களாகும். அயத்யக்சு, மேதாப்பாக் என்பன இம்மாளி கைகளைச் சூழ்ந்திருக்கும் அழகிய பூங்காக்களாகும். கோட்டையின் மதிற்கூவரைக் கடந்து உள்ளே துழைந்ததும் அரண்மனை வாயில் தென்படும்.