பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


84 அரண்மனையின் வாயில் மிக்க பேரழகுடையது. இதை நக்கர் காளு என்று அழைப்பர். இவ்வாயிலுக் குள் நுழைந்தவுடன், முரசுப் பீடம் தென்படும். இப்பீடத்தின் மேல் முரசங்கள் அணிபெற வைக் கப்பட்டிருக்கும். காவல் மரமும், முரசுக் கட்டிலும் தமிழ் மன்னர்களால் மிகவும் உயர்வாக மதிக்கப் பட்டன என்பதை நாம் சங்க இலக்கியங்களின் மூலமாக அறிந்திருக்கிருேம். அதே போல மொக லாயர்களும் முரசுப் பீடத்தைப் புனித முடைய ஒன்ருகப் போற்றி வந்தனர். அரச குடியினரும், அரசரின் பெரு மதிப்பிற்குரிய அதிகாரிகளுமே இம் முரசை முழக்கும் உரிமை பெற்றவர்கள். இவ்வரச முரசம் நாள்தோறும் ஆறு முறை முழக் கப்படும். நக்கர் கானு என்று கூறப்படும் இவ்வழகு மிக்க பெருவாயிலுக்குமேல், மாடம் ஒன்று அமைந் துள்ளது. முரசை முழக்கும் குழுவினர் அம்மாடத் தின் மேல் அணி பெற வீற்றிருப்பர். இப்போது இம்மாடம் பண்டைப் போர்க் கருவிகள் வைக்கப் பட்டிருக்கும் பொருட் காட்சி நிலையமாக விளங்கு கிறது. இவ்வாயிலுக்குள் நுழைந்து தான் அரச மாளிகைகளுக்குள் செல்ல வேண்டும். கி. பி. 1754 ஆம் ஆண்டு, பேரரசர் அகமதுஷா இந் நக்கர் கான வில்தான் படுகொலை செய்யப்பட்டார். மதிற் சுவரின் வாயிலுக்கும் தக்கர் காணுவுக்கும் இடைப் பட்ட வெளியில் அரண்மனைக் காவலுக்கென அமர்த்தப்பட்ட படை வீரர்களின் பாடி அமைந்