பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


85 திருந்தது. அரண்மனைக் காவல் என்பது பெரு மதிப்பிற்குரிய பணியாகும். இப்பணியை ஏற்கப் போர் வீரர்கள் போட்டியிட்டு முந்துவர். பெரும் பாலும் இராசபுத்திரர்களே இப்பணியை ஏற்கும் காவல் வீரர்களாக அமர்த்தப் பட்டனர். நக்கர் கானுவைக் கடந்து உள்ளே சென்றதும், திவானி ஆம் என்ற பெருமாளிகை உள்ளது. இம் மாளிகையின் முன் பகுதியில் அமைந்துள்ள அத். தாணி மண்டபம் மிகப் பெரியது; கலைச்சிறப்புடன் கூடியது. மொகலாய மன்னர்களின் நாளோலக்கம் இம்மண்டபத்தில் தான் இடம் பெறும். மன்னர் பெருமான் இம்மண்டபத்தில் வீற்றிருந்து வெளி நாட்டுத் துரதுவர்களுக்குக் காட்சி கொடுப்பார் ; அவர்களோடு அரசியல் உறவுபற்றி உரையாடு வார் ; படை வீரர்களின் அணி வகுப்பை நாள் தோறும் பார்வையிடுவார்; வணிகர்களோடு வாணிகம் பற்றி உரையாடுவார். மன்னனைக் காண விரும்பும் பொது மக்களும், முன்னிசைவு பெற்று இம்மண்டபத்தில் சென்று காணலாம். திவானி ஆம் மாளிகையின் சுவர்கள், வெண் ணெய்போல் மென்மையாக அரைத்தெடுத்த சுண்ணச் சாந்தினுல் தளம் பூசப் பெற்றவை. அரசர் வீற்றிருக்கும் அத்தாணி மண்டபத்தின் முன் பகுதி நீண்ட, சிற்ப வேலைப் பாடுகளுடன் கூடிய அழகு முற்றத்தைக் கொண்டது. டில்லி நகரில் வாழும் பிரபுக்கள் யாவரும் தத்தம் தகுதிக் கேற்ப, முறைப்படி வரிசையாக, எதிரெதிரில் இம்