பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86


முற்றத்தே நிற்பர். இளவரசர்கள் அரியணைக்கு இரு மருங்கும் நின்று கொண்டிருப்பர்.

அரியணைக்குப் பக்கத்தில் ஓர் அழகு வாயில் தென்படும். இவ்வாயிலின் வழியாகத் தான் அரசர் பெருமான் அத்தாணி மண்டபத்தில் அடியெடுத்து வைப்பார். அரசர் வீற்றிருக்கும் அரியணை, உயர்ந்த பீடத்தின் மேல் அமைந்துள்ளது. ஷாஜகானும், அவுரங்கசேப்பும் நாள் தோறும் இரு முறை இந்நாளோலக்கத்தில் அமர்ந்து அரசியற் செயல்களை மேற்கொண்டனர். வாரத்தில் குறைந்தது நான்கு நாட்களாவது இப்பேரவை கூடும். சிறிய பிரபுக்களெல்லாம் அத்தாணி மண்டபத்தின் வெளியில் நிற்பர். இவர்களை மற்றவர்களினின்றும் பிரிப்பதற்காக நடுவில் ஒரு திரை இடப்பட்டிருக்கும்.

மொகலாயப் பெருமன்னர்கள் உலகின் பல பகுதிகளிலிருந்தும் மிகச் சிறந்த கலைஞர்களை வரவழைத்து அவர்களை ஆதரித்து வந்தனர். பன்னாட்டுக் கலைஞர்களும் தங்களுடைய அரசவையை அலங்கரிக்க வேண்டும் என்று அவர்கள் பேரவாக் கொண்டனர். அதைப் பெருமைக்குரிய செயலாகவும் கருதினர். அரசர் வீற்றிருக்கும் அரியணைக்குப் பின்னால், உயரத்தில் கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவரும் சிற்பத்தோடு கூடிய வண்ணப் பளிங்குப் பலகையொன்று பொருத்தப்பட்டுள்ளது. அது ஒரு பிரெஞ்சுச் சிற்பியினால் செதுக்கப்பட்டது. ஓர் ஆடவன் ஒரு கின்னரத்தை மீட்டி இன்னிசை எழுப்புவதுபோல் அச்சிற்பம்