பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


87 அமைந்துள்ளது. கிரேக்கர்களின் இ ைச க் கடவுளான ஆர்பியசையே (Orpheus) அவ்வாட வனின் உருவம் குறிப்பிடுகிறது என்று கூறு கின்றனர். கி. பி. 1857 ஆம் ஆண்டு ஏற்பட்ட #úuriš s6osib (Soldiers’ Mutiny) 6T6örp sur லாற்ருசிரியர்களால் குறிப்பிடப்படும் முதல் உரிமைப் போரின்போது, இச்சிற்பம் இம்மாளிகை யினின்றும் பெயர்த் தெடுத்துக் கொண்டு செல்லப் பட்டது. அந்நிகழ்ச்சிக்குப் பிறகு ஆங்கிலத் தலைமை ஆளுநராக இந்தியாவிற்கு வந்த கர்சன் பிரபு இலண்டன் மாநகரில் அச்சிற்பத் தைக் கண்டுபிடித்து, மீண்டும் இம்மாளிகையி லேயே கொண்டு வந்து பொருத்தினர். கோடை நாட்களின் வெப்பத்தைத் தணிப்பதற்காக இவ்வத் தாணி மண்டபத்தைச் சுற்றிச் செந்நிறத் திரைகள் தொங்கவிடப்படும். அ. த் தி ரை ச் சே8லகள் தொங்கவிடப் பொருத்தப்பட்ட வளையங்களே இன்றும் அங்குக் காணலாம். திவானி ஆம் என்று சொல்லக்கூடிய இம்மாளி கையின் இடப் புறத்தில் ஒரு பாதை செல்லு கிறது. இப்பாதையின் முகப்பில் ஒரு வாயில் உள்ளது. இவ்வாயிலைச் செந்நிறத்திரை மறைத்துக் கொண்டிருந்த காரணத்தால் செந்திரை வாயில்’ (லால் பர்தா) என்று இது அழைக்கப்பட்டது. அர சரின் நன்மதிப்பைப் பெற்ற பெருமக்களே இவ்வாயி லுக்குள் நுழைய முடியும். அவர்கள் லால் பர்தாரி கள் என்று அழைக்கப்பட்டனர். லால் பர்தாரிகள் மொகலாய அரசியலில் செல்வாக்குப் பெற்றவர்கள்.