பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

திவானீ ஆம் மாளிகையிலிருந்து பார்த்தால் லாகூர் வாயிலுக்கு (Lahore gate) எதிரில் ஒரு நெடுஞ்சுவரைக் காணலாம். இது பேரரசன் அவுரங்கசேப்பினால் கட்டப்பட்டது. இது இம் மாளிகையையும் நிலவு அங்காடி (Chandni chowk) யையும் பிரிக்கிறது. அரசர் அத்தாணி மண்டபத்தில் வீற்றிருந்தால் அங்காடியில் போவோர் வருவோர் எல்லாரும் கண்களுக்குத் தென்படுவர். இதைத் தடுக்கவே இப் பெருஞ்சுவர் எழுப்பப்பட்டது.

திவானீ ஆம் என்ற இப்பெரு மாளிகையை அடுத்தாற்போல் திவானீ காஸ் என்ற மற்றோர் அழகு மணி மாளிகை அமைந்துள்ளது. இம் மாளிகைக்குள் எல்லாரும் செல்ல முடியாது. அரசரின் தனிப்பட்ட உரையாடல்களுக்கு இம் மாளிகை இடமாக விளங்கியது. அரசியலில் பங்கு கொண்டுள்ள முக்கிய அலுவலர்களே இதனுள் செல்ல முடியும். அவ்வலுவலர்கள் இக் காலச் சட்டசபை உறுப்பினர்களின் தகுதியைப் பெற்றவர்கள் என்று கூறலாம். இம்மாளிகையில் வேறு சில தனிப்பட்ட அறைகளும் உண்டு. அவ்வறைகள் கண்ணைக்கவரும் ஒப்பனையுடன் கூடியவை. இவ்வறைகளில் மன்னர் தம் நண்பர்களோடு உரையாடுவார்; விருந்துண்பார்.

இத்திவானீ காசில்தான் மயிலாசனம் (Peacock throne) அமைக்கப்பட்டிருந்தது. இது மொகலாய மன்னன் ஷாஜகானால் செய்து வைக்கப்பட்டது. இவ்விருக்கை பொன்னாலாகியது; நவமணிகளும் பதிக்கப் பெற்றது ; பன்னூறாயிரக் கணக்கான