பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


89 மோகராக்கள் மதிப்புடையது. பாரசீக மன்னன் காதிர்ஷா இந்தியாவின்மீது படையெடுத்தபொழுது டில்லி நகரத்தின் செல்வங்களைக்கொள்ளையடித்துக் கொண்டு சென்ருனல்லவா ? அப்போது இம் மயிலாசனத்தையும், விலைமதிப்பற்ற கோகினுளர் வைரத்தையும் மற்றக் கொள்ளைப் பொருள்களோடு கொண்டு சென்று விட்டான். நாதிர்ஷா தன் கொள்ளைப் பொருள்களோடு பாரசீகம் திரும்புவதற்கு முன்பாக இம்மாளிகையில் தான் வீற்றிருந்து, வெற்றிகொண்ட இந்நாட்டை மீண்டும் முகம்மது ஷாவிற்குத் திருப்பிக் கொடுத் தான். குலாம்காதிர், ஷா ஆலத்தின் கண்களைக் குருடாக்கிய இடமும் இதுவே. மொகலாய மன்னன், வடிா ஆலம், இம்மாளிகையில் வீற்றிருந்துதான் கி. பி. 1803 ஆம் ஆண்டு ஆங்கிலத் தளபதி லேக் பிரபுவிற்கு வரவேற்பு நல்கினன். இந்திய நாட்டி ற் குச் சுற்றுலா வந்த ஆங்கிலப் பேரரசன் ஐந்தாம் ஜார்ஜும், அவருடைய மகன் வேல்சு இளவர சனும் இந்தத் திவானி காசிலேயே அமர்ந்து நாளோலக்கம் நடத்தினர். திவானி காஸ் மாளிகையின் பின்பகுதி மன்னர் வாழும் இருப்பிடத்தைக் கொண்டதாகும். இந்திய நாட்டைத் தம் விரலசைவில் ஆட்டிப் படைத்த மொகலாயப் பெருமன்னர்கள் உண்டு, உறங்கும் இடம் எத்தகைய சிறப்போடு இருந்திருக்கும் என் பதைச் சொல்ல வேண்டியதில்லை. நம் கண் பட்ட விடமெல்லாம் மிக உயர்ந்த பளிங்குக் கற்களே தென்படும். சிற்ப நுணுக்கம் இல்லாத இடமே அங்கு இல்லை. உலகின் நாற்புறங்களிலும்