பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கட்டபொம்முகதை யான் படிக்க கண்ணாலே பார்த்திட
                                  வேண்டுமையா
மைத்துரைகதை யான் படிக்க உண்மை யுரைத்திட
                                 வேண்டுமையா.
பாஞ்சாலக்கதை யான்படிக்கப் பக்கத்துணை செய்ய
                                 வேண்டுமையா.
சக்கதேவிகதை யான்படிக்கத் தயவு செய்திட
                                 வேண்டுமையா

மேறபடி சந்தம் - சரஸ்வதி துதி


வெண்டாமரையிலுறைபவளே, வேதாந்த ஞானத்தினுட்
                                      பொருளே,
நான்முகன் நாவிலிருப்பவளே, நம்பின பேர்க்
                                 கருளம்பிகையே
நாடெங்கும் செல்லுதுன் சாத்திரங்கள், நானெங்கு
                        சொல்லுவேனுன் மகிமை?
ஊரெங்கும் சொல்லுதுன் சாத்திரங்கள், உண்மையைச் சொல்லுவேன் கேட்டவர்க்கு.
உன்துணையல்லாது வேறு துணை உண்டோ,யோசனை
                                   செய்யயிலே,
என்துணை நீயென்று சொல்வதனாலெங்களை ரட்சிக்க
                               வேண்டுமம்மா.
சக்கம்மாள் வாக்குப் பலிக்க வேண்டும் தண்டமிழ்
வாசகம் பொங்க வேணும். பாஞ்சாலி வாக்குப் பலிக்கவேணும் பங்கமில்லாச்
செல்வம் பொங்க வேணும். ஊமைத்துரை கட்டபொம்மு செய்த ஒப்பில்லாச் செய்கை
தெரிய வேணும். மாதமும் மாரி பொழியவேனும் வந்தெம்மைக் காப்பாற்ற
வேண்டுமம்மா

.

மேற்படி சந்தம்-முருகன் துதி நீலமயிலுறை வேலவனே, நீர்மலி செந்திச் கடவுளரே அம்பிகை மீளுகதி பாலகனே ஆறுமுகா வள்ளி நாயகனே பாலாபிசேகம் பழநியிலே பண்டார வேடம் புனத்தருகே தேனுயிசேகம் பழநியிலே சிங்காரவேடம் கழுகுமலை. SACCSCCSHHHSAASAASAASAASAAAS 1. சக்கம்மாள். 2 பாஞ்சாலி - கிராமதேவதைகள் தெலுங்கு பேசும் சாதியினருள் சிலர் வணங்கும் தெய்வங்கள்.