10
பொங்கு மிலந்தைமுட் கோட்டையிலே போற்றிட வாழ்
கின்ற சக்கதேவி,
பாஞ்சைப்பதியிலே கட்டபொம்மு பச்சமிலங்கிய
சக்கதேவி,
வாய்பேசாப் பாண்டிய னுமைத்துரை வல்லபம் பேசிட
வந்தருள்வாய்
வல்லபம் பேசிட வந்தருள்வாய், வஞ்சனை வல்பிணி
தீர்ப்பவளே
என்ன பிழைகளிருந்தாலும் எங்களை முக்காலும்
காவுமம்மா”
மாதவமுங் கல்வியாலே மகிமையான
வல்லபமுஞ் செல்வ மிக வளருமிந்த
பூதலத்திற் கட்டபொம்மு கதையைப் பாடப்
புத்தியிலே வந்தருள்வாய் சக்கதேவி
பாததுணை யென்றுன்னைப் போற்றுமென்னை
பால்முகத்தைப் பாராமலிருந்திடாதே
சீதவயல் சூழ் பெருமைப் பாஞ்சைநாடு
சிந்தாத தெள்ளமுதே! சிந்தித்தேனே.
தன்னன தானன தன்னனன்னா
தன்னன தானன தன்னனன்னாதம்பிகாளை பொம்முதுரை சக்கம்மாள் பாத விசேஷ
மதால்
கொத்துப் பல்லாரியை யாண்டதிலே குற்றமிதுவரை
கண்டதில்லை.
யார்செய்த மோசமோ பூமியிலே அந்தரமாரி பொழிய
வில்லை.
எவர்செய்த மோசமோ பூமியிலே எள்ளளவு மழை
பெய்யவில்லை.
பன்னீர்வருட மழையுமில்லை பஞ்சமுண்டானது
தேசமெல்லாம்
8. பச்சம்- பட்சம், தேசம் 9. காவுமம்மா-காப்பாற்றும் அம்மா.