பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏喜 தந்தையினுத்தர வாகுமையா தமையனுரைத்திடுங் காரியங்கள் எப்படி யாகிலும் தச்சணத்திற் கெய்யத் துணிந்திடிலுய்ந்திடுவோம். செல்ல பொம்முதுரை தன் குடும்ப சகிதம் புறப்பட்டு, என்னையாண்டவளே என்று பாடிக் கொண்டு கடத்தல் குண்டு ருக்கு ராஜா சபை-தேச விசாரணை மேற்படி சந்தம் முன்வருங்காரிய முரைப்பவரே முந்திரி பிசகில்லா !” மந்திரியே பின் வருங்காரிய முரைப்பவரே, பேரறிவான சிகாமணியே மாதமும் மாரி பொழிகிறதா? மானிடப் பூண்டு தழைகிறதா? நாட்டில் மும்மாரி பொழிகிறதா? நஞ்சைபு ஞ்சை விளை கிறதா? கேட்டதற்குப் பதில் சொல்ல வேண்டும் கிர்டதர்பார்க்கு உண்மை மந்திரியே. மந்திரி சொல்வது ஏராள மழை பெய்ததாலே இட்டபயிர் விளைந்திட்ட தய்யா நம்மதி காரத்திலுள்ள தெல்லாம் நன்மையல்லாதென்ன தின்மை' வரும் தர்பார் நடக்கும்போது செல்ல பொம் முதுரையும் தம்பியும் என்னையாண்டவளே என்று பாடிக் கொண்டு ராஜாவைக் கண்டுரைப்பது குண்டுரையாள்கின்ற கோமானே கொற்றவனே நல முற்றவனே தெச்சன மேகும் வழிதனிலே சீர்த்தியைக் கேட்டிங்கு - வந்தோமையா. 18. தமது குடிகள் தென் தேசம் சென்ற பின் தாமும் போக வேண்டும் எனத் தலைவனும், அவனது தம்பியும் முடிவு செய்கிருர்கள். 19. முந்திரி பிசகில்லா-சிறிதும் பிசகில்லாத முந்திரி-ஒரு தமிழ்ப் பின்னம் மிகச் சிறிய அளவு. 20. தின்மை-தீமை.இது நன்மைக்கு எதுகையாக வந்த சொல்.