பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 நாடிழந்தேகும் வழிதனிலே நன்மையைக் கேட்டிங்குவந்தோ 莓” குண்டுரு ராஜா சொல்வது-மேற்படி சந்தம் கொத்துப் பல்லாரியை யாண்டவனே, கோத்திர கம்பள தோத்திரனே, நாட்டை யிழந்திடக் காரணமேன், ஞாயமதைச் சொல்ல வேண்டுமையா தெச்சன தேசத்திற் கேகும்வகை திறனேசெப்பிட வேண்டுமையா செல்லபொம் முதுரை சொல்வது பன்னிரு வருடமு மாரியின்றி பட்டது கஷ்டங்கள் கம்பளங்கள். கஷ்ட மடைந்திட மாட்டாமல் மட்டிலாத் தெச்சனஞ் சென்றது.காண். கம்பள முன்செலக் கண்டதன லன்புள்ள நாங்களுஞ் செல்லுகிருேம். குண்டுரு ராஜா சொல்வது முந்தின கம்பளம் போனலும் பிந்தின நீரங்கு போகவேண்டாம். பஞ்சம் தெளிந்திடும் காலம்வரை யிங்கிரு மொன்றுக்கு மஞ்சவேண்டாம் காற்று மழை வெயிலல்லாமற் கவலே யென்னென்ன வந்தாலும், மாற்றிடு வேனெனச் சொன்னதற்கு மாறவேண்டாம் பதில் கூறவேண்டாம். செல்லபொம் முதுரை சொல்வது குண்டுரை யாள்கின்ற கோமானே, கொற்றவனே, நலமுற்றவனே, தெச்சணமேகும் வழிதனிலே கீர்த்தியைக் கேட்டிங்கு வந்தோமையர் வந்தவழியிலிருந்து கொண்டா லெந்தவிதந் தெற்கே போகிறது? பெற்றவள் வீட்டிற்குப் போனலும் பிள்ளைவிருந்து நாள் மூன்றல்லவோ 21 என்றபழமொழி கேட்டிருந்து மிவ்விதஞ்சொல்லிடக் கூடுமோதான் ! 21. பழமொழி - தமிழ். るー2