பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 கம்பளத்தார் விளுவுதல் ஆயர்குலத்தி லுதித்தவரே அஞ்சலி செய்திடக் காரணமேன் ? வஞ்சமில்லாத மனத்தவரே வந்தெம்மைக் கும்பிடக் காரணமேன்? ஆட்டுக்காரர் சொல்வது ஆண்டவரே துரைப்பாண்டியரே அஞ்சாதவீர முடையவரே கம்பளத்தார்குலச் செல்வர்களே, கண்டவதிசயஞ் சொல்லுகிருேம். எட்டயபுரம் பக்கத்திலே ஏற்ற குருமலைச் சார்பினிலே, ஆடுமாடளவில்லாம லாமுநீளமுந் தோன்றவில்லை உங்க ளுருவத்தைப் பார்க்கையிலே ஒருருவாகத் தோணுதையா ஆட்டுக்காரர் சொன்னதைக் கேட்ட உடன் நமது ராஜாக்கள்தான் அங்கே வந்திருக்கலாம். இப்போது சென்று பார்க்க வேண்டுமெனக் கம்பளங்கள் கெற் சிதம் - மேற்படி சந்தம் பெரிய நாயக்கர் சொல்வது ஒரே ஒரே முத்தாலு ஒக உத்த மாட்டலு செப்ப பொய்யேன் அந்து ஒச்சின ராஜாவாரு அந்தறுனு மன தல்லி பிட்ட ஈபோடுலு செப்பமாட்டா இங்க ஒகவிசை வின வண்டரு அந்தரு ரண்டரா போத்தமுரா அய்யா வாறுத்த சூசவாலா மச்சி தாலமு மொச்சேசே மங்குசாலமு பொய்யேசே போத்தமுரா ஒரே போத்தமுரா போடுலா, அந்தறு போத்தமுரா 2 ே கம்பளங்கள் புறப்பட்டு குடிசை சமீபமாக வரும்போது காளை பொம்முதுரையும் தமையனும் பேசிக்கொள்வது. மேற்படி சந்தம் தம்பி காளைபொம்முதுரை சார்ந்தவர் யாரென்று பார்த்தனையா நம்குலம் போலவே தோன்றுதையா ஞாயம் விசாரிக்க வேண்டுமையா 25. இத் தெலுங்குப் பாடலுக்குத் தமிழ் மொழிபெயர்ப்பு. ஏலே ஏலேமுத்தாலு ஒருநல்ல வார்த்தை சொல்லப் போறேன் அங்கு வந்துள்ள ராஜாக்கள் அத்தனை பேரும் நம்தாய் பிள்ளைகள் இந்தப் பசங்க சொல்லும் வார்த்தை இன்னும் ஒரு தடவை கேளுங்கடா ஐ ல்லோரும் வாங்கடாபோக லாண்டா அய்யாமாரை பார்க்க வேண்டுமடா. நல்ல காலம் வந்திட்டுது கெட்டகாலம் போயிட்டுது போகலாம்டா ஏலே போகலாண்ட பசங்களா எல்லோரும் புோகலாண்டா,