25
பேஷ்காரர் சொல்வது
தாழைமடவின் மணஞ்சொரியச் சந்தணத் தேக்கில் பொங்கமுற
தென்னை கமுகு குலைபோடச் சிறிய வாளைமீன் மாறிவிழ
வாழைபலா வில்பபழம் பழுக்க மந்திக் குரங்குகள் பந்தாட
கோகிலங்கூவிய சோலையிலே கொற்றம் பொருந்திய தெட்டைநகர்
எட்டை நகரதிகாரத்திலே எள்ளவுங் குற்றமில்லை மன்னா
அச்சமயத்தில் பெரியமுத்து சொல்வது
வீராதி வீரனே, எட்டமன்னா, விக்கிரமாதித்த பூபதியே,
இன்று நடந்திடும் செய்திகளை இன்பமுடன் சொல்லக்
கேளுமைய்யா.
நம்மதிகாரத்தி னெல்லையிலே நண்ணுங் குருமலைச் சார்பினிலே,
ஆரோ ஒரு பயலாடுகளை அஞ்சாமல் மேய்த்தென்னக்
கெஞ்சுகிறார்,
செல்ல பொம்மென்று பேர் சொல்லுகிறான் சேவிக்கிறான் தன்மை
பாவிக்கிறான்.
குச்சுகள் தோன்றுது பக்கத்திலே கூவியே தெற்குக்கு ஒடுகிறான்.
ஒடுகிறான் சக்திதேவி துணையுண் டெனக்கும் பிட்டகையுடனே
ராஜா சொல்வது
காவலை மீறிய செய்கையிலே கண்டிப்புச் செய்திட வேண்டுமடா.
ஆணை மீறிய செய்கையிலே அவனைத்தண்டிக்க வேண்டுமடா.
ஏவலைமீறிய செய்கையிலே யிஸ்பரனானாலுந் தோஷமில்லை.
வார்த்தையை மீறிய செய்கையிலே வம்புகள் செய்தாலும்
தோஷமில்லை.
இங்கிப்படியிருக்க செக் காரக் குடியில் கம்பளத்தாருடன் வீற்றிருக்குஞ் செல்லபொம் முதுரைக்கு ஆட்டுக்காரர் சொல்வது மேற்படி சந்தம்
பூதலனே கருணாகரனே, போற்றுகிறோந்துதி சாற்றுகிறோம்
செல்ல பொம் முதுரை கேட்பது
என்ன அவசரமிங்கு வந்தி ரெனக்க றியவே சொல்லுவீரே
ஆட்டுக்காரர் சொல்வது
செல்வர்க்கழகிய சீராளா, செல்ல பொம்முதுரை, கேளுமையா. எட்டையாபுரத்து ராஜாவா லேற்பட்ட காவல்கள் மெத்தவுண்டாம்