பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டையபுரம் ராஜசபை-மேற்படி சந்தம் அய்யாவே அய்யாவே பேஷ்காரா, அன்புடனே சொல்லக் கேளுமையா. தென்னிளசைப்பதி சீமையிலே சேர்ந்தகுடிகளின் வாழ்க்கையிலே. செய்யு முறைமைகள் தப்பினரா, சேதிகளென்ன விளம்பிடுவாய். பேஷ்காரர் சொல்வது செய்யு முறைமைகள் தப்பவில்லை, சேதிகளொன்றிங்கே வந்ததுவே செல்லபொம்மு, காளை பொம் மெனவே சேர்ந்தவர் சோதர சோதரராம். ராஜாவைப் பார்த்திட வேணுமென்று நம்பிக்கை கொண்டிங்கு வந்தனராம். ராஜா சொல்வது அன்னவரை யாரெனப் பார்க்கவேணும் அவரையிங்கே யழையுமையா?? ஆர்காணும் நீர் வந்த தன்மைகளை அன்புடனே சொல்லக் கேளுமையா 28 செல்ல பொம்முதுரை செல்வது எங்கட்கிருப்பு வடதேசம் இப்போதிருப்பது தென்தேசம். தெச்சன பூமியைப் பார்க்கவென்று செய்தனளே சக்கதேவியம்மாள். மாரியுமில்லை மழையில்லை மாடாடு நிற்பதற்காசையில்லை. நாட்டிலிருக்குங் குடிககெளல்லாம் நாமமில்லாமலே ஒடினர்காண். நாங்களும் வந்திங்கே பார்க்கையிலே நண்ணுதற்கான குருமலைதான். வாழ்ந்து வருகிமுேம் ராஜாவே வஞ்சமில்லைகாண் பாருமையா. 28. இது எட்டையபுரம் ராஜா பேஷ்காரிடம் சொல்வது. 27. இது அழைத்த பின் வந்த செல்ல பொம்மு, கர்ளை பொம்முவிடம் எட்டையபுரம் ராஜா கேட்பது 28. இது செல்ல பொம்மு, காகாபொம்மு ஆகியவைகளின் பதில். (இவை யகனத்தும் நாடகமேடையில், அவர்களை நோக்கித் திரும்பிப் பார்த்தும் பேசுவார்கள்)