பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*3 எட்டையபுரத்து ராஜா சொல்வது நல்லது நல்லது உன்மனம் போல் நடப்போ மொன்றுக்கு மஞ்ச வேண்டாம். மாதமொருகிடாய் கொம்புடனே வந்த உடன் பேட்டி காணவேண்டும். பாற்குட மேழும் வரவேண்டும், பண்ணையிலாடுகள் மேய்க்க வேண்டும். இந்தப் பிரகாரஞ் செய்திரானலெந் நாளு மிங்கே வசித்திடலாம். செல்லபொம்முதுரை சொல்வது-மேற்படி சந்தம் பின்னவனே நீர் சொல்லு முத்தரவை மாறி நடந்திடோம்பூமியிலே செல்லவிடை தரவேண்டுமையா தென்னிளசைப்பதி காவலனே. உத்தரவு பெற்றுக் கொண்டு இருப்பிடம் வந்து சேர்ந்து சில நாளையில் கொண்ட பொம் முதுரை பிறத்தல்-செல்ல பொம்மூதுரை புத்திரப்பெருமை யுரைப்பது-விருத்தம் ஒன்பது லக்க மிட்ட உறுதிசேர் கம்பளத்தில் பொன்பணம் பெருகற்கான புத்திரனவதரித்தான் சம்ப்ரமச்சரித ஞான தண்டமிழ்க் கொண்ட பொம்மன் இம்பரிலெவரும் போற்றற் கென்னுள மகிழத் தானே தன்னனச் சந்தம் மைந்தன் பிறந்திடும் நாளையிலேயே மங்கள நாத முழங்குதையா செல்வன் பிறந்திடும் நாளையிலே சீதளக் கற்பகம் வீசுதையா பிள்ளைக் கவலை பெருங்கவலே எள்ளத்தனையில்லாதோடியதே சக்கமைப்பாதவிசேஷ மதால் சங்கட முற்ருலுந் தீர்ந்திடுமே. கொண்டு பொம்முதுரை பிறந்த சில நாளைக்குப் பின்னர் விவாகஞ் செய்தல்-செல்லபொம்முதுரை சொல்வது மேற்படி சந்தம் தம்பிகாளை பொம்முதுரை சங்கதி சொல்லிடக் கேளுமையா சின்னவயது சிறுவயது சேர்ந்தது ப்ராயம் பதினறு இந்தவயதிலே மைந்தனுக்கு இன்பமுடன் மாலை சூடவேண்டும். மாலைக்கழுத்ை டும் மைந்தற்கு மைந்தன் பிறக்க வேண்டும்.