பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ} கி செக்க நகருள்ள கம்பளத்திற் செல்லக் கலியாணம் செய்ய வேண்டும் மாப்பிள்ளைக்கான பெண் பார்க்க வேண்டும் வாழையடி வாழை யாக வேண்டும். கொண்ட பொம்முதுரைக்குக் கல்யாணம் கடந்த சில நாளைக்குப்பின் கட்டை வெட்டையிலே கட்டபொம்முதுரை பிறந்தல்ை கட்ட பொம்மு என்று பெயர் வைத்தும் பின்னல் ஊமைத்துரை முதலானவர்கள் பிறந்ததையும் சொல்வது-மேற்படி சந்தம்-கொண்டுபொம்முதுரை சொல்வது புஞ்சை நிலங்களைச் சேர்க்கையிலே புத்ரன் பிறந்தனனெந்தனுக்கே கட்டையை வெட்டையிலுற்றதல்ை கட்ட பொம்மென்று பேரிட்டழைப்பேன் ஊமைத்துரை பிறந்தார் மணிபோலுடன் பிறந்தனள் வெள்ளை ് யம்மாள் வீரமல்லு திம்மி பாஞ்சாலி வீரசக்கு பொம்மியுற் பவித்தார்.20 மக்கள் சம்பத்துப் பெருகிடவே வந்தருள் செய்தனள் சக்கதேவி நாளொரு மேனிபொழுதொரு வண்ணம் நலம்பெற வாழ்வதற் கன் பளித்தாள் செல்வமில்லாதுற்ற எங்களுக்கு சேயர்கிடைத்ததே தெய்வச் செயல் முள் முறியாமல் முருங்கைப்பூ வாடாமல் முற்றிலுங்காப்பவள் சக்கதேவி கட்டபொம்மு ஊமைத்துரை பிறந்தவுடன் வாலிபமான பின்னர் கொண்டு பொம் முதுரை வழக்கப்படி எட்டைய புரத்திற்கு சங்கராந்திப் பொங்கலுக்குப் போக கட்ட பொம்மு துரையிடம் சொல்வது-கொண்டு பொம்முதுரை சொல்வது மேற்படி சந்தம் கட்டை வெட்டையிலே பிறந்தாய் கட்ட பொம்மென்று நாமங் கொண்டாய் நான் பெற்ற கண்மணி கட்டபொம்மு நானென்றுரைத்திடக் கேளுமையா எட்டைய புரம் ராஜாவாலேற்பட்ட காரிய மொன்றுளது. பாற்குடமேழ்கிடாயொன்றுடனே வாக்குத்தவருமற் போக வேண்டும். 29. இக்கதையின் படி கட்டபொம்முடன் பிறந்தவர்கள் ஊமைத்துரை வெள்ளேயம்மாள், வீரமல்லு, திம்மி, பாஞ்சாலி, வீரசக்கு, பொம்மி. வேறு கதைகளில் வேறு விதமாகவும் கூறப்படும்.