பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 : ராஜ சபையில் இவ்விதம் கேட்டுக் கொண்டிருக்கும்போது கொண்டு பொம்மூதுரை தன் புத்திரரோடு சந்தித்தல் கொண்டு பொம்முதுரை சொல்வது மேற்படி சந்தம் அய்யனே எட்டப்ப ராஜாவே அன்புடனேர் வார்த்தை சொல்லு கிறேன். ஆண்டவன் வாக்குக் கெதிர்வாக்கு அஞ்சாமற் சொல்வாரோ பூமியிலே. சொன்ன கிடாயுடன் பாற்குட முஞ்சொன்னது போற்கொண்டு. வந்தோமையா பூபதியே உங்கள் புண்ணியத்தால் புத்திரபாக்கியம் பெற்றெடுத் - தேன். முன்னே பிறந்தவன் கட்டபொம்மு, பின்னே பிறந்தவனு மத்துரை உங்கள் சமூகத்தைப் பார்க்கவென்றே ஒடியே வந்தனரென் பிறகே. எட்டையபுரத்து ராஜாவுக்குக் கட்டபொம்முதுரையும் ஊமைத்துரையும் வணங்காமல் கிற்கிற படியால் கோபமாக உரைத்தல்-மேற்படி சந்தம் ஏழை மதியுள்ள உங்களுக்கு எங்களைப் பார்க்கவும் ஞாயமுண்டோ? மூட மதியுள்ள உங்களுக்கு முன்னே நிற்கவும் ஞாயமுண்டோ? எட்டைய புரஞ்சீமையிலே என்னை வணங்காத பேர்களில்.ை ராஜமரியாதை செய்யவில்லை நல்லோர் பழக்கமுஞ் செய்யவில்லை, நல்லது நல்லது கொண்ட பொம்மு வல்லபம் பேசிட வந்தனையா? துஷ்டப்பிள்ளைகள் பெற்றவர்க்கு துன்பங்கள் கடோசியில் மெத்த உண்டு: . செல்ல பொம்மு துரை போன போதே செய்கையுங் கூடவே போயினதோ? இப்படிச் சொல்லக் கட்டபொம்மு துரைக்குக் கோபம் பிறந்து சொல்வது-மேற்படி சந்தம் ஏற்பட்ட பாற்குடமேழுடனே யேற்குங்கிடா யொன்று கொண்டு வந்,ே கட்டனுங் கப்பங் கொடுத்திடவோ மட்டிலா வீரம் Logoi...— 31. கடோசி-கடைசியின் மருஉ