34
இருவரும் பராக்கிரமம் மேலிட்டு உலகதுன்பங்கள் செய்துவரும் நாள் குருமலை வேட்டையில் எட்டைய புரத்தாரும் வேட்டையாடையில் பன்றி வழக்கு-கட்டபொம்முதுரை சொல்வது மேல்படி சந்தம்
பன்றி இறந்தது எம்மாலே பன்றியைக் கண்டது உம்மாலே
காயங்கள் பட்டது எம்மாலே கண்களிற் கண்டது உம்மாலே
குண்டுகள் பட்டது எம்மாலே கோபம் பிறந்தது உம்மாலே
ஈட்டிகள் தைத்தது எம்மாலே எதிரே கண்டது உம்மாலே.
எட்டையபுரத்தார் சொல்வது
மேல்படி சந்தம்
ஆராலிறந்தாலு மெந்நகர் வந்தறிக்கை செய்து நீர்போகவேண்டும்
எவராலிறந்தாலு மெந்நகர் வந்திந்த வழக்குகள் தீரவேண்டும்
என்பன்றி உன்பன்றி யென்றுரைத் தாலிந்த வழக்குகள் தீர்ந்திடுமோ
போவென்றும் வாவென்றும் சொல்வதனாற் புண்ணிய முண்டுமோ மன்னர்களே.
இருபேருக்குங் தர்க்கமாக மீறிய செய்கையால் செக்காரக்குடி சேர்ந்து பின்னல் சாலிகுளம் பக்கம் வேட்டையாடையில் நாயை முயலெதிர்க்க அந்த இடத்தைக் கண்டு சொல்வது.
தம்பிதம்பி ஊமைத்துரை சம்ப்ர தாயக் கதை கேட்டனையா ?
சாலி குளத்துப் பக்கத்திலே சார்ந்திடுஞ் செம்மணல் மேட்டினிலே
காடைவேட்டை யாடையிலே கண்ட வதிசயஞ் சொல்லுகிறேன்.
முன்முயல் சென்றிடப் பின்னே நாய் முடுக்க மேட்டுக்குப்
போனவுடன்
பின்னேடும் நாயை விரட்டுதுபார் முன்னோடுகின்ற முயலினையே
. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நாடகம், கூத்து முதலியவற்றைப் பார்க்கப் போலீசார் வருவார்கள். இடையிடையே கட்டபொம்முவைத் துஷ்டன் என்று இகழ்ந்து பேசினால்தான் நாடகம் நடக்கவிடுவார்கள் எனவே பொதுவாக கட்டபொம்முவைப் புகழ்ந்து பாடும் கதைப் பாடல்களில் இடையிடையே அவனைப் பழித்தும் இழித்தும் கூறும் பகுதிகள் கலந்து காணப்படும்.
35. இதே கதை ஐவர் ராஜாக்கள் வேட்டைக்குப் போன இடத்தில் வள்ளியூர் கோட்டை கட்டவேண்டிய இடத்தில் நடந்த தகாகக் கூறப்படும். பலகதைகள் வீரம் மிகுந்தவர்கள் வாழ்ந்த கோட்டைகளைப் பற்றி இத்தகைய கதைகள் உண்டு.