பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

德莎 அப்பா நாயக்கன், சின்னதுரை, சுப்பையா, முத்தையா, புங்கபிள்ளை, குப்பணன், வீரப்பன், வெள்ளைச்சாமி, நொண்டிச், சுப்பையா, சிங்கன், குழந்தைவேலு, மாதவ நாயக்கன் வீரப்பன் வன்னியன் வாலசுப்ரமணியன், கட்டமல்லன், பாண்டிய நாயக்கர், வீரலெக்கைய , பட்டியிலே வளர்மெய்யணனும், முத்துவீரணனும், கருப்பையாவும், முள்ளுக்காட்டு வீரபாண்டியனும், வேடிக்கைக்காரன், சிவத்தமுத்து, வாள் வீச்சுக்காரன், கருத்தமுத்து, ஆறுமுகம், சிங்கன், முத்துப்பிள்ளை, அருட்புரத்துரை, முத்துப்பிள்ளை, சுப்ரமணியபிள்ளை என்றுரைத்தால் துன்பங்களோடுமே காதவழி. சங்கரன் குடையன் காலாடி வங்காறு நாயக்கன் பாண்டியனும் கந்தன் பகடையும், முத்தன் பகடையும், கைகார ராமன் பகடையுடன், பொட்டிப்பகடையும் சட்டிப்பகடையும் போர்வீரன் சக்கையன் - எலக்கையனும் கட்டையன், மொட்டையன், கொட்டாப் புளியுடன் கம்பள ராணுவம் பொங்கிடவே. இவ்விதம் சேனை வீரர்கள் புறப்பட்டுக் குற்ருலஞ் சென்று விசாரிக்க அங்கில்லையென்று திருச்சுளிவரை அலையச் செய்து கடைசியில் ராமநாதபுரம் மீட்டிங்கியென்று சொன்னவுடனே அங்கேயுஞ் செல்வது-மேற்படி சந்தம்-கட்டபொம் முதுரை சொல்வது ராமநாதபுர மீட்டிங்கியாம் ரயிட்டன் துரையினுத்தரவு சி . வாய்பேசாத் தம்பி நாமங்குஞ் சென்று வஞ்சகஞ் செய்வதைப் பார்க்கவேண்டும். உத்தரவென்னென்ன தந்தாலும் உட்படுங் காரியந்தான் பெரிது. ஆயிரங்கம்பளம் நூறுபரிவாரம் யாவருமங்கு புறப்படுவோம். ராமநாதபுரம் சென்று விசாரிக்கையில் மீட்டிங்கியென்றுகேட்டு கோணத்தலை வாசலில் மேமெத்தைக்கு வரும்படியாய்ச் சொல்லி சாகீஷன் மேசர், ரயிட்டன்துரை தனது பட்டாளக் காவலைத் தயார் செய்து சொல்வது - சாகீசன் மேசர் துரையவர்கள் சொல்வது - மேலபடி சந்தம் வாருங்கோ வாருங்கோ சிப்பாய்காள், கேளுங்கோ கட்டன் செய் சங்கதியை ஆங்கிலேய ஆட்சியிலிப்படியும் ஆணவஞ் செய்தானே கட்டபொம்மு 41 ரயிட்டன் - (Writer) குமா ஸ்தா,