உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

கட்டபொம் முதுரை வாக்குமூலத்தினால் கலைக்டர் துரை யவர்களுக்குக் கோபம் பிறந்து சொல்வது-மேல்படி சந்தம்

அத்தரிபாணிச்சோ என்ன சொன்னாய் ஆரிடம் பேசுவதிந்தவிதம் ?
ரெங்கப்பன் சிப்பாயி கேட்டனையா நீதியில்லாதவன் வார்த்தைளை?
கட்டபொம்மு சொன்ன வார்த்தைகளைக் காதாலே கேளுங்கள்
சிப்பாய்களே,
பாஞ்சையிலே நீயாய் வாழ்வதற்குப் பட்டங் கொடுத்தாரோ
ராணியம்மாள் ?
கம்பள ராணுவ மேட்டிமையா காணாமற் செய்கிற சேட்டைகளா?
கோட்டைக் கதவைச் சாத்துங்கடா கூசாமற் சண்டைகள் போடுங்கடா.

கட்டபொம் முதுரை சொல்வது மேற்படி சந்தம்

சந்திப்புச் செய்திட வந்ததற்குத் தக்க மரியாதை செய்தீரையா.
மீட்டிங்கு பார்த்திட வந்ததற்கு வேண்டு மரியாதை
செய்தீரையா.

ஊமைத்துரை பராக்கிரமம் மேற்படி சந்தம்

அண்ணாவே, அண்ணாவே, கேளுமையா, அன்புள்ள தம்பிநான்
சொல்லுகிறேன்.
சாகீஷன் மேஷர் செய்கையினாற் சண்டைக் குறிகளுந் தோன்று
தையா
சண்டைக் குறிகளும் தோன்றுவதாலிந்த இடந்தனில் நிற்க
வொண்ணா.
இந்த இடந்தனில் நிற்பதனால் என்னென்ன மோசங்கள்
வந்திடுமோ ?

தம்பி வார்த்தையைக் கேட்ட வுடனே தானாபதியை மறந்து
மேல் மெத்தையிலிருந்து கீழே இறங்கும்போது துரையவர்கள்
போகாதே என்று தடுத்தல்-மேற்படி சந்தம்

போகாதே போகாதே கட்டபொம்மு பொல்லாங்கு செய்யாதே
சொல்வதைக் கேள்,
ஏகாதே ஏகாதே கட்டபொம்மு எங்கே நீ போகிறாய் கட்ட
பொம்மு ?
ஓடாதே ஓடாதே கட்டபொம்மு ஓடினான் மடியைப் பிடிப்பேன்.