பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

 ஆங்கிலேயர்களது முயற்சிகளே. இக்கதைகள் உண்மையை வெளிப்படுத்தி முறியடித்து விட்டன. வெள்ளையர்கள் மறைத்து விட்ட பல நிகழ்ச்சிகளை இக்கதைப் பாடல்கள் நமக்கு வெளிப்படுத்துகின்றன.

    இக்கதைப்பாடல்களைக் கொண்டு மட்டும் சரித்திர நிகழ்ச்சிகளை நாம் உறுதியாக அறிந்து கொள்ள முடியாது. இவற்றை ஒதுக்கித் தள்ளிவிட்டும் சரித்திர உண்மைகளை அறிந்து கொள்ள முடியாது. கிடைக்கும் கல்வெட்டு முதலிய சரித்திரச் சான்றுகளையும், நாட்டுக் கதைப்பாடல்கள் முதலிய இலக்கியச் சான்றுகளையும் ஒப்பிட்டு நோக்கி, பலவாற்றானும் செய்திகளைச் சலித்துப் பார்த்து முடிவுக்கு வரவேண்டும்.
இக்கதைப்பாடல் பற்றி
   இக்கதைப்பாடல் கோவில்பட்டித் தாலுகாவிலும் இராமநாதபுரம் மாவட்டம் தென்பகுதியிலும் இன்னும் பாடப்பட்டு, நடிக்கப்படும் கூத்துகளில் வழக்கில் உள்ளது. இதற்கு மூலங்கள் பல பல நாட்டுப்பாடல்கள். அந்த நாட்டுப்பாடல்களிலுள்ள கதை நிகழ்ச்சிகளையும், கும்மிப்பாடல்களையும் இக்கதைப்பாடல் மேற்கொண்டுள்ளது. ஆயினும் தனி நாட்டுப் பாடல்களைப் போல கூட்டுப் படைப்பாக இல்லாமல், தனி ஆசிரியர் ஒருவரால் படைக்கப்பட்டது. இதன் ஆசிரியர் அடைக்கலபுரம் சிதம்பரசுவாமிகள். அவர் பெயருக்கு ஆசிரியரே அன்றி அவருக்கு முன்பிருந்த நாட்டுப் பாடல்களையும், கதை களையும் கதைப்பாடல்களையும் சேகரித்து, கூத்து நாடகத்திற்கியைய ஒரு கதைப்பாடலாக எழுதியுள்ளார். ஒருவர் இயற்றியது நாட்டுப்பாடல் ஆகுமா ? (Folk Literature) என்ற கேள்வியை நாட்டுப் பண்பாட்டியல் ஆராய்ச்சியாளர்கள் கேட்பதில்லை ஏனெனில் நீண்டகதைப் பாடல்கள் தனிப்பட்டவர்களால் எழுதப்படுகிறது. இது நாட்டுப்பாடல் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்டு, ஏதாவதோர் பிரதேசத்தில் மக்களிடையே பரவி, அவர்க னாலும் வாய்மொழியாகப் பரப்பப்பட்டால் (oral transmission) அதுவும் நாட்டுப்பாடலாகும் என்பதை உலகநாட்டுப் பண்பாட்டியல் ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள். இக்காரணத்தைப் பற்றியே தமிழ்க்கதைப் பாடல்கள் பலவற்றையும் (Folk ballads) நாட்டுக் கதைப்பாடல்கள் என்றழைக்கிறோம்.
    இப்பாடல் ஒர் அசல் நாட்டுப்பாடல் என்று கூறலாம். நம் நாட்டு உழைக்கும் மக்களின் எண்ணங்களையும், சிந்தனைகளையும் மெருகில்லாமல் நாட்டுப்பாடல் சித்தரிக்கிறது. அதனால்தான்