உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

தன் புத்தியல்லது வேறுபுத்தி சாற்றினாலு மதைக் கேட்கமாட்டார்.
வேஷங்கள் போட்டவர்க்கே காசுவேலைகள் செய்திடிற் கூலியுண்டு.
வேஷம் போடவிடிற் காசுமில்லை வேலைசெய்யாவிடிற்
கூலியுண்டோ ?
போகவிடை தரவேண்டுமையா பொல்லாத கஷ்டங்கள் செய்ய
வேண்டாம்.

தானாபதி ரெம்பவேண்ட சென்னைத் துரைமார்களுக்கு இரக்க முண்டாகித் தானாபதியைப் போவென உத்தரவு கொடுக்கப் பாஞ்சை நகர் வந்தவுடன் பாதர் வெள்ளைக்குக் கல்யாணம் செய்ததை நினைத்து சிறிது வருத்தமுண்டாகிச் சொல்வதுவது

சாமிகளே ஐயா கட்டபொம்மு தாளுபதி கோடி தெண்டஎனிட்டேன்.

கட்டபொம்முதுரை சொல்வது

வாருங்கோ வாருங்கோ தானாபதி வந்தீரா வந்ததே நல்லவேளை.

தானாபதி சொல்வது

நாமநாதபுரம் கோட்டையிலே நீர் மறந்தோ பயந்தோடி வந்தீர்?

கட்டபொம்முதுரை சொல்வது

நாங்கள் மறக்கவும் ஞாய முண்டோ ஞாபக மில்லாம லோடி
வந்தோம்

தானாபதி சொல்வது

ஞாபக மில்லாமலோடிவந்தால் நான் படுங் கஷ்டத்திற் கென்னவழி ?

கட்டபொம்முதுரை கேட்பது

என்னென்ன சங்கடஞ் செய்தனரோ எங்கட்குரைத் திட வேண்டுமையா

தானாபதி சொல்வது

பெற்றவள் பிள்ளையை வைதாலும் பரீதியில்லாமலே தள்ளுவரோ?

கட்டபொம்முதுரை சொல்வது

அப்பனே வந்ததே போதுமையா இப்படி வாருங்கோ தானாபதி,