பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器懿 புறப்பட்டு ஒட்டப்பிடாரத்தில் இறங்கி விசாரிக்கையில், ஊமைத் துரையுடன் தானதிபதி திருச்செந்தூர் போனதைக்கண்டு சின்னமெக்காலே, பெரியமெக்காலே சாம்ப்ராணி ஓடையில் வளைத்தல். அது கண்டு கட்டபொம்முதுரை நகராக வடிக்க ஊமைத்துரை சொல்வது-மேற்படி சந்தம் அய்யாவே தானுபதி அஞ்சாத டம்மாளங் கொட்டுதையா அஞ்சாத டம்மாளம் கொட்டுதையா அண்ண ரழைக்கிருர் போகவேனும். திருச்செந்தூரை நீங்கி வரும்போது சாம்ப்ராணி ஓடையில் சின்ன மெக்காலே பெரிய மெக் காலே துரையவர்கள் பட்டாளங் களுடன் எதிர்க்க அதனின்று தப்பி பாஞ்சை வந்து சேர்ந்தனர். காலன் துரையும் பிர்க்கெட்டு மேஜரும் கோட்டையை முற்றுகை போடுவதை அறிந்து வல்ல நாட்டிற்குப் பாதர் வெள்ளையனை அனுப்பிவிட்டு கட்டபொம் முதுரை சொல்வது-முதற் சண்டை. இன்பமடைந்திட வேண்டு மென்ருலிருக்க வொண்ணுது கோடைக்குள்ளே துன்ப மடைந்திடவேண்டு மென்ருல் துணிந்து வாழுவோங் - - கோட்டைக்குள்ளே. குண்டுக்குத்தப்பிட வேண்டு மென்ருல் கூடவெண்ணுது கோட்டைக்குள்ளே. உயிர்பிழைத்திட வேண்டுமென்ருல் ஒளியவொண்ணுது கோட்டைக்குள்ளே. காகம் பறக்காத பாஞ்சையிலே கருப்புச் சட்டைகள் நிற்பதைப்பார். சிட்டுப் பறக்காத பாஞ்சையிலே சிவப்புச் சட்டைகள் - நிற்பதைப்பார். இப்படிச் சட்டைகள் கூடிக்கொண்டால் எப்படி நாட்டினில் வாழ்கிறது? பாஞ்சையிலே கட்டபொம்முதுரை வீரர்களுடன் தயாராய் வல்லநாடு சென்ற சுந்தரலிங்கம் வெள்ளையனுக்கு அறிக்கை யிடல்-வெள்ளையன் கித்திரை-வல்லநாடு-சுந்தரலிங்கம் சொல்வது. கொண்டையன் கோட்டை மறத்திபெற்ற கொடுமுடியே ஒ வெள்ளையய்யா. கொடுமுடியே ஒ வெள்ளையய்யா கோபமில்லா மலெழுந்திருப்பீர். 45. தகரா-பெரிய முரசு.