52
சுந்தரலிங்கம் சொல்வது-மேற்படி சந்தம்
காலன் துரையொரு பட்டாளம் மேலும் மேலும் வந்து கூடினரே
வெள்ளேயன் சொலவது-மேற்படி சந்தம்
காலன்துரை எம காலனடா கஷ்டங்களென்ன
விளைந்திடுமோ
பெண் சாதியிடம் விடை கேட்டல் விருத்தம்
பாஞ்சையிற் கோட்டையிட்டுப் பாரினி லெவரும் போற்
வாஞ்சையிலரசு செய்யும் மன்னவன் கட்டபொம்மு
பூஞ்செறி கமல பாதம் போற்றவே போக வேண்டும்
தேன்சொரி பவளவாயாற் ஜெயமென விடை யீவாயே.
தன்னனச் சந்தப் பாட்டு
மாதரசே சொல்லக் கேளடி நீ மன்னவன் கட்டபொம்
மேந்த்ர துரை,
பெற்ற குழந்தைக்கு மேலானவற்ற குழந்தைபோல்காப்
பவன்டி,
பூமியிலென்ன நடக்கக்கண்டால் பொற்சதங்கைப்பாதம்
நோகுமென்று.
தண்டியல்மேல்வர வேண்டு மென்று சண்டை பிடிக்கிற
சிங்கமடி.
சிங்கமழைத்திடும் நாளையிலே செல்வதற்குத் தடை செய்ய
வேண்டாம்
போக விடை தர வேண்டுமடி போகத்தடை செய்தால்
கோபம் வரும்.
பெண் சாதி சொல்வது-விருத்தம்
நல்லவருலவு மிந்த நாட்டினிற் கற்பினாலே
சொல்வதற் கருமையான சுந்தர வுன்னைக்கூடி
எல்லையில் வல்ல நாட்டிற் கிறையவனென்ன வாழ்ந்தீர்
தொல்லையில் வருந்துதற்கே தோற்றின கனவைக்கேண்மோ.