பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 வானத்தைச் சுற்றுதே கண்கள் ரெண்டும் வாரியடிக்குதே பேய்க்குதிரை. பூமியைச் சுற்றுதே கண்கள் ரெண்டும் போகுது பாடரா முத்துவர்ணம். இருபேரும் பாஞ்சைப்பதி சென்று கட்டபொம்மு துரையை வணங்கல் - மேற்படி சந்தம் பாஞ்சையிலே இது நாள் வரைக்கும் பங்க மடைந்திடக் கண்டதில்லை. சாலிகுளத்துக்குப் பக்கத்திலே சண்டைக் கொடியின நாட்டலுற்ருர் சண்டைக் கொடியினை நாட்டயிலே சங்கதி பேசவும் - ஞாயமுண்டோ? வெள்ளம் வருமுன்னே போட்ட அணை வெற்றியடைந்திடுங் குற்றமில்லை. வெள்ளங்கள் வந்தபின் போட்ட அணை வெற்றனையாக முடியுமையா. நாமினி யோசனை செய்வதனல் ஞாயங்கிடைக்குமோ - பூமியிலே ? ஆனலுமாகுது போனலும் போகுது ஆண்டவனே விடைதாருமையா. கட்டபொம் முதுரை சண்டை செய்யும் வகை கூறல்-விருத்தம் மல்லிகை முல்லைப் புஷ்ப மணஞ்செறி கொண்டையிட்டு கல்லினிற் ஜொலிக்கு முத்துக் கடுக்கணு மிலங்கக் கையில் வல்லயம் பிடித்து நின்ற மைந்தனே உலகமீதே வெல்வதும் தோற்பதெல்லாம் விதிவச மாகையாலே தன்னனச் சந்தம் யுத்தமுனையிலே நிற்கையிலே யோசனையில்லாமல் நிற்கவேண்டும். சண்டை முனையிலே நிற்கையிலே தந்திரமாகவே நிற்கவேண்டும். தந்திரமு மந்திரமும் வேண்டுமடா சமர்த்துப் பேசிடலாகாது கம்பளவீரர்கள் மத்தியிலே கண்ணனையொப்பானே போய் வருவாய்,