உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

மேதினி சுற்றித்திரிந்தாலும் வெள்ளையன்பேர்லும்கப்படுமோ?
எப்படியாகிலும் பார்க்கவேண்டுமின்றே புறப்பட
வேண்டுமையா
சேனை மடிந்ததைப் பார்க்கையிலே செப்பற்கடங்குமோ
சிந்தையிலே ?

இரண்டு பேரும் புறப்பட்டுச்செல்ல இச் சமாச்சாரம் சென்னைக்கு பறந்தது. மகாராணியவர்களுக்குத் தெரிவிக்க அப்படிப்பட்ட சுத்த வீரனைக் கொல்லாமல் சின்ன நாவபுப் பட்டங் கொடுக்கச் சொல்லி அக்கடிதம் கோவில்பட்டிக்கி வர, மற்றப் பாளையப்பட்டாரறிந்துவேறே கடிதம் எழுதித் தெரிவிக்க அக்கினிச் சென்னல் பட்டாளத் துடன் புறப்படல்-இரண்டாவது சண்டை-அக்கினிச் சென்னல் கோபம்

அத்தரி மாதிரி மாதரிச்சோ செய்தானே கட்டபொம்மு
நெய்யிலே ரொட்டியைத்தின்னலாமா மெய்யிலே சட்டைகள் போடலாமா ? தொப்பிதலையிலே வைக்கலாமா துரைகளென்று பேர்
சொல்லலாமா
காவிலே சூசுகள் 64 போடலாமா கையிலே துப்பாக்கி
வைக்கலாமா ?
இங்கிலிசுக் கொடியை நிறுத்தலாமா இங்கிலாண்டிலே
வசிக்கலாமா
பற்பல யோசனை செய்யவேண்டாம் பாஞ்சைப் பதிக்குப்
புறப்படவே

புறப்பட்டு பட்டாளங்களுடன் இங்குள்ள பாளையப்பட்டாரால் வெள்ளையனுப் பதிலாள் தேடிப் போனதையறிந்து பின் சென்று விரட்டல் -மேற்படி சந்தம்

ஆரடா ஆரடா சிப்பாய்காள் அஞ்சாத யுத்தங்கள் செய்ய
வேண்டும்.


62. இச்செய்தி பிற்காலத்தில் புனையப்பட்டது. இதற்கு ஆதாரமில்லை. கட்டபொம்மு கோட்டையை விட்டுப் போனவுடன் பிற பாளையத்தாருக்கு அவனோடு சேரக்கூடாதென்றும், அவனுக்குத் தங்க இடமளிக்கலாகாது என்றும் கலைக்டர் லுஷிங்க்டன் அனுப்பிய சுற்றறிக்கை.

63. Major Agnew. 64. சூசுகள்–Shoes 65. கட்டபொம்மு, சென்னைக்குச் சென்று திருநெல்வேலிக் கலைக்டரைப் பற்றிப் புகார் செய்யச் செல்லவேண்டுமென்றுதான் எண்ணினான். அதற்காகவே