64
கட்டபொம் மென்றறியாததனால் கபடஞ்செய்ய
நினைத்தீர்களே.
வேண்டாமய்யா சண்டை வேண்டாமய்யா வேண்டுகிறோம்
சண்டை வேண்டாமையா. சண்டைகள் போடவு மார்க்கமுண்டோ சாடைகள் பேசவும்
ஞாயமுண்டோ ?
சாடைகள் பேசவும் ஞாயமுண்டோ சக்கம்மாதிக்கம்மா
ஒடிவாயேன்.
இரண்டுபேர்களும் பேசி வெற்றியடைந்து விருப்பாச்சி சென்று ராஜா ஏற்றில் இருட்டுக் கொட்டகையிலடைபட்டு மல்லப்புறத்து வழியாய் வரும்போது தாகத்தால் உழுகிறவர்களிடம் தண்ணீர் கேட்டல்-மேற்படி சந்தம்-ஊமைத்துரை சொல்வது.
மேழிபிடிக்கின்ற அண்ணமாரே வேண்டுகிறோம் கொஞ்சந் தாக சலம் தாகந்விர்க் கசலம் கொடுத்தால் தாழ்விலா தென்றாமும் வாழ்ந்திருப்பீர்
முத்தணத்தேவன் வெறுத்துப்பேசல்
ஏருழு மெங்கட்கே தண்ணிரில்லை என்றாலுனக்குக்
கொடுப்பதெங்கே?
ஊமைத்துரை சொல்வது
ஏனப்பா இப்படிப் பேசுகிறாய் ஏழைக்கிரங்காதோ உன் மனது?
முத்தனத் தேவன் சொல்வது
தர்ம மடமிங்கே கட்டவில்லை சாஸ்தியாய்ப் பேசினால்
கோபம் வரும்
கூலிக்குழுங் குப்பணத் தேவன் சொல்வது
தாகத்திற்குச் சலம் இல்லையென்றால் சங்கடம்
நீங்காதலைந்திடுவார்.
ஆரய்யா தாகந்தணிந்திடுவீர் அன்பிலா தெங்கள்மேற்
கோபம் வேண்டாம்.