68
ஆனைமேலே அழுக்கெடுக்கும் ஏமச்சான்
ஆண்டிவண்ணான் பேத்தி நானே தில்லேலே
லோலே லோலே லோ
தன்னானன்னானானானே
குதிரைமேலே அழுக் கெடுக்கும் ஏமச்சான்
குமரவண்ணான் பேத்திநானே தில்லேலே லோலே
லோலே லோ
கழுதைமேலே அழுக்கெடுக்கும் ஏமாமா
கருப்பவண்ணான் பேத்தி நானே தில்லேலே
லோலே லோ 72
வண்ணத்தி தன் புருஷனைப் பார்த்துச் சொல்வது
கழுகுமலை குருவிகுளம் ஏசண்டாளா
கண்டெடுத்த சுண்டுமுத்து ஏசண்டாளா
சுண்டுமுத்தைக் காணாமல் ஏசண்டாளா
சுண்டுதாளே கண்ணீரை ஏசண்டாளா
நானும் நடந்திருப்பேன் ஏசண்டாளா
நடப்பாரைப் பார்த்திருப்பேன் ஏசண்டாளா
சாமி நடையைப் போலே ஏசண்டாளா
சையலிலே நான்காணேன் ஏசண்டாளா?
ஊரில் அழுக்கெடுப்பது - தன்னனச் சந்தம்
கழுதை பத்தவும் நேரமாச்சு கஞ்சிஊத்துங்கோ
அம்மா மாரே
அழுக் கெடுக்கவும் நேர மாச்சு அன்னம் போடுங்கோ
அம்மா மாரோ துறைக்குப் போகவும் நேரமாச்சு சோறு போடுங்கோ T
அம்மா மாரோ
சோறு போடுங்கோ அம்மா மாரே நேரமாகுது போக வேணும்
வண்ணான் சேலை துவைப்பது
கட்டபொம்மு சீமையிலே சோ சோ சோ
காரணங்கள் மெத்த உண்டாம் சை சை சை
கம்பளத்தாரால் மீட்கப்பட்டதும், பாஞ்சாலக்குறிச்சிக்குச் சென்று கோட்டை யிட்டதும், இரண்டாவது போரில் கோட்டைப் பிடிப்பட்டதும், பின்னர் சிவகங்கை சென்று அங்கு போரில் ஈடுபட்டு பிடிபட்டுத் தூக்கிலிடப் பட்டதையும், பிற நாட்டுக் கதைப்பாடல்களும், வெள்ளையர் குறிப்புக்களும் கூறுகின்றன. எனவே ஊமைத்துரை 7 வருஷம் ஆண்டது உண்மையன்று. 72. 73; கோவில்பட்டி வட்டார நாட்டுப் பாடல்கள்.