பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


89. ஊமைத் துரை சீமையிலே சோ சோ சோ ஊக்கங்களு மெத்த உண்டாம் சை சை சை பாஞ்சாலி சீமையிலே சோ சோ சோ பாக்கியங்கள் மெத்த உண்டாம் சை சை சை சதுர கிரி மலை யோரம் சோ சோ சோ சார்ந்திருக்கும் திருகுகள்ளி சை சை சை திருகுகள்ளி பூவெடுக்க சோ சோ சோ திரிந்தேன் சிலகாலம் சை கை சை என் புருஷன் அழுக்கெடுக்க சோ சோ சோ இரு பேரும் பொதி சுமக்க சை சை சை பின்புருஷன் முன்ன்ே போக சோ சோ சோ பேசமாட்டா சக்களத்தி சை சை சை ஆற்றுக்குள்ளே ஊத்துத்தோண்டி சோ சோ சோ அழுக்குச் சேலை யெல்லாந் தப்பி சை சை சை வேற்றுப் பொழுதாகு முன்னே சோ சோ சோ வீட்டுக்கு நாம் போக வேணும் சை சை சை74 சேலை துவைத்துக் கொண்டிருக்கும் போது ஆரக்குளம் பக்கம் பட்டாளங்களைக் கண்டு தன் புருஷனுக்குரைப்பது-தன்னன சந்தம் ஏடே ஏடே என்புருஷா என்னமோ சூதாய்த் தோணுதடா. பட்டாக் கத்தி பளிரெனவே பட்டாளங்களைப் பார்த்தனையா இன்னஞ் சண்டைகள் செய்யத்தாண்டா இங்கே கூடுது - பட்டாளம். கால மழைகள் பெய்ததிலே கம்பங்கதிர் விளைந்திடவே படகுருவி போற் கூடுதடா பார்த்திடவே பயமாகுதடா. பார்த்திடவே பயமாகுதடா பாஞ்சையில் மன்னற்குச் சொல்லவேனும், வண்ணுன் சொல்வது-மேற்படி சந்தம் ஆமடி ஆமடி சின்னப்பிள்ளே அறிந்து சொன்னவள் கொட்டிக்காரி, இச்சணமே சென்று சொல் லாவிடில் என்ன விளையுமோ - பாஞ்சையிலே, கண்களிற் கண்டதைச் சொன்னுேமானுற் கருணை செய்குவாள் சக்கதேவி நேரிற் கண்டதைச் சொன்னே மாளுல் நியாயமுன் டென ஒடிவாடி, 74. வண்ணுன் நாட்டுப்பாடலக் தழுவி எழுதியபாடல். இப்பாட்டில் 8-11 அடிகள், 11 முதல் 16 வரை நாட்டுப்பாடல் அல்ல; புலவர் எழுதியது.