பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95

சீத்தலைச் சாத்தனார் வேண்டுகோட்கிணங்கிப் பாடியுள்ளார் என்பதும் நமக்குப் புலனாகிறது. இப்படிப் பாடுதற்குக் காரணமாக இருந்தவர் முன்புதான், இவர் இந்நூலையும் அரங்கேற்றி வைத்தனர் என்பதும் தெரியவருகிறது. "உரைசால் அடிகள் அருளக் கூலவாணிகன் சாத்தன் கேட்டனன்” என்பதும் சிலப்பதிகாரப் பதிகத்துக் காணும் குறிப்பாகும்.

இளங்கோ அடிகளார், தாம் சேர மரபினராய் இருந்தும், தாம் மரபின் ஆண்மையும் அரசும் இன்னோரன்ன ஏனைய சிறப்புக்களையும் மிகுதிப்படுத்திக் கூறுதற்குரிய வாய்ப்புப் பெற்றவராக இருந்தும், தாம் துறவு பூண்டு தூயராய் விளங்கிய காரணத்தால், நடுநிலை பிறழாது முடிவுடை மூவேந்தர்க்கும் தாம் இயற்றும் நூல் உரித்தாதல் வேண்டும் என்னும் காரணத்தால் தம் நூலைப் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என வகுத்துக்கொண்டு ஒவ்வொரு மன்னரது சீரும் சிறப்பும் தோன்றும் இடங்களில் நன்கு பாடிச் சென்றிருப்பதைப் படிக்குங்தோறும் யாரும் பரவசம் உறாமல் இருக்க இயலாது; இவரது நடுநிலைமைப் பண்பையும் போற்றாமல் இருக்க இயலாது.

இளங்கோ முத்தமிழ்க் கல்வியில் மூதறிவுடையவர். இதனால்தான், இவருடைய நூலாகிய சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காவியமாய் இவ்வுலகில் நிலவி வருகிறது. இளங்கோ அடிகளார் புலவர் பெருமக்களால் பெரிதும் பாராட்டப்படுபவர். சுப்பிரமணிய பாரதியார், தாம் அறிந்த புலவர்களாக எடுத்துப் பேசிய மூவர்களுள் இளங்கோவடிகளார்க்கு இடங் தந்து பாடி இருத்தலை நன்கு சிந்திக்கவும். "யாம் அறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்ஙனமே பிறந்ததில்லை; இது உண்மை