பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

வெறும் புகழ்ச்சியில்லை” என்று உயர்த்திப் பாடுவாராயினர். இளங்கோ அடிகள் முத்தமிழ்த் துறையிலும் மூதறிவு படைத்தவர் என்பது இவர் யாத்துள்ள சிலப்பதிகாரத்து யாண்டும் காணலாம். இதனால்தான், இந்நூலும் இயல் இசை நாடகப் பொருட்டொடர் நிலேச்செய்யுளாகக் கூறப்படுகிறது. நாடக உறுப்பினைப் பெரிதும் பெற்றுத் துலங்குதலின், நாடகக் காப்பியம் எனவும் நவிலப்பெறும் நன்னயம் வாய்ந்தது. இந்நூல் தன்னகத்து இசைப் பாட்டும், உரைப்பாட்டும் இடையிடையே விரவப் பெற்று வருதலின், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளெனப் பகரவும் படுகிறது. இந்நூல் தன்பால் உயரிய நீதிகளைக் கொண்டு விளங்குவது. அங்கீதிகளாவன : "அரசியல் பிழைத்த அரசர்கள் அறக்கடவுளாலேயே அழிக்கப்படுவர். ஊழ்வினை அதற்குரியவனை எப்பெற்றியானும் தேடி அடைந்து, அவனை நுகர்விக்கும். கற்புடைப் பெண்டிரை உயர்ந்தோரும் ஏத்துவர்” என்பன. இன்னோரன்ன சிறப்பியல்புகள் இதனிடத்து அமைந்திருத்தலின். இதனை 'நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்' எனப் பாரதியார் செப்பிச் சென்றனர். இந்நூலுக்கு ஈர் உரைகள் எழுதப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று அடியார்க்கு நல்லார் உரை. மற்ரறொன்று அரும்பதவுரை. இவ்விரு உரைகளினல் 'பொன்மலர் நாற்றம் உற்றாற்போல்” இந்நூலின் மாண்பு மேலும் சிறப்புற்றுக் காணப்படுகிறது. அடியார்க்கு நல்லார் உரையால் பல இறந்துபட்ட நூற்களின் பெயர்களையும் பாடல்களையும் அறியும் பேறு நாம் பெற்றுள்ளோம். இன்னோரன்ன நூல்கள், வெண்டாளி, முறுவல், பெருநாரை, பெருங்குறிஞ்சி, பெருங்குருகு, பாசாண்டம், பரதம், பரதசேனபதியம், பஞ்சமரபு, பஞ்சபாரதீயம், நூல், செயிற்றியம், சயந்தம், குருகு, குணநூல், களரியாவிரை, கனாநூல், இசை நுணுக்கம், அணியியல் முதலியன. இதுபோது