பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

 விடைகளை அமைதியாக ஈந்தனர். பல்லாண்டு நில உலகில் வாழ்ந்தனர். இவரது இறுதிக்காலம் எண் பத்து ஒன்பது எனில், இவரது முதுமையை உணர்ந்து கொள்ளலாம்.

அலியார் புலவர் என்பரும் இஸ்லாமிய இனத்துப் புலவரே. இவர் இந்திராயன் படைப்போர், இபுனியாண்டான் படைப்போர் என்னும் நூல்களைச் செய்திருப்பதாக அறிகிறோம். இவ்விரு நூற்களும் எவரும் வெருக்கொளத்தக்க அரக்கப் போரை வருணித்திருப்பனவாகும்.

முகம்மத் ஹ"சேன் என்பாரும் ஒரு நூல், தமிழ் மொழியில் யாத்துள்ளனர். அது பெண் புத்தி மாலை என்பது.

மதாறு சாகிபுப் புலவர் மிதிறுசாநா என்னும் தமிழ் நூல் பாடியிருப்பதாகவும் அறிகிறோம்.

எவரும் மறக்கமுடியாத தமிழ்ப் பெரும் இஸ்லாமிய இனத்துக் காவியப் புலவர் உமறுப் புலவர் ஆவார். இன்னர் பாடிய நூலே சீறாப் புராணம் என்னும் சீரிய புராணம் ஆகும். இச்சீறாப் புராணமே முகம்மது நபியின் வரலாற்றையும் அவரது வீரதிரச் செயல்களையும் அறிவிப்பதாகும். நவரசங்களும் அமையப்பெற்ற இஸ்லாமிய இனத்துத் தமிழ்க் காவியம் இதுவே. காவியப் பண்பு அத்துணையும் அமையப் பெற்றுக் கவினுற விளங்கும் காவியமும் இதுவே. -

மஸ்தான் சாயபு என்பாரும் மாபெருங் தமிழ்ப் புலவர். தாயுமானவரைப் போன்ற தகைமை படைத்தவர். அவர் யாத்த நூல் போலவே தாமும் ஒரு நூலைப் பாடியவர். தாயுமானவர் பாடிய நூல் எங்ஙனம் தாயுமானவர் பாடல் எனப் பெயரினைப்