பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102


மட்டாரும் தென் களங்தைப் படிக்காசன்
உரைத்ததமிழ் வரைந்த ஏட்டைப்
பட்டாலே சூழ்ந்தாலும் மூவுலகம்
பரிமளிக்கும் பரிந்த ஏட்டைத்
தொட்டாலும் கைமணக்கும் சொன்னாலும்
வாய்மணக்கும் துய்ய சேற்றில்
நட்டாலும் தமிழ்ப்பயிராய் விளைந்திடுமே
பாட்டினுடை நளினம் தானே

என்னும் செய்யுளால் அறியலாம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த புலவர் சிகாமணி யார் சீதக்காதி இறந்தமை குறித்துப் பல பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றுள் ஒன்று,

பூமா திருந்தென்ன புவிமா திருந்தென்ன பூதலத்தில்
நாமா திருந்தென்ன காமிருந் தென்னநன் நாவலர்க்குக்
கோமான் அழகமர் மால்சீதக் காதி கொடைமிகுந்த
சீமான் இறந்திட்ட போதே புலமையும் செத்ததுவே.

என்பது. இப்பாடலில் சீதக்காதி இறந்ததால் புலமையும் இறந்தது என்று புலவர் கூறுவாராயின், இதிலிருந்து சீதக்காதி தமிழ்ப் புலவர்களை எந்த அளவுக்கு ஆதரித்து வந்தார் என்பது புலனாகிறதன்றோ?

மேலும், தமிழ் மக்களும் இஸ்லாமிய மக்களும் தமக்குள் சமய வேற்றுமை பெரிதும் கருதியவர் அல்லர் என்பதும் நமக்குப் புலனாகிறது. சமய வேற்றுமை கருதியிருப்பாராயின், சேதுபதி மக ராஜர் வைசூரியால் வருந்திய காலத்து, சவ்வாதுப் புலவர் அந்நோய் நீங்க இராஜராஜேஸ்வரி மீது பஞ்சரத்தினமாலை பாடியிரார். இது மட்டும் ஒர் எடுத்துக்காட்டு ஆகாது. தமிழர்கட்கும் இஸ்லாமியர்கட்கும் சமயநெறியில் வேறுபாடில்லை என்-