உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதற்கு எடுத்துக்காட்டாக அய்யாசாமி முதலியார் என்பவர், குணங்குடி மஸ்தான் சாகிபு மீது குணங்குடி நாதர் பதிற்றுப்பத்து அந்தாதி பாடியிருப்பதாலும் அறியலாம். மஸ்தான் சாகிபு பாடிய அகத்தீசர் சதகமும், நந்தீசர் சதகமும் இதற்குச் சான்றாகக் கூறலாம்.

சைவப்பெரும் புலவர்களும் இஸ்லாமிய இனத்தவர்களும் மிக நெருங்கி நட்பு முறையில் பெரிதும் இயைந்து வாழ்ந்திருக்கின்றனர் என்பது சைவப் புலவர்கள் தம் தெய்வீக நூற்களில் இந்துஸ்தான் மொழியினைத் தங்கு தடையின்றி ஆண்டு இருப்பதாலும் நன்கு உணரலாம். இங்ங்னம் தம் அருமை நூல்களில் ஆட்சி காட்டியவர்கள் அருணகிரி நாதரும், குமரகுருபர சுவாமிகளும் ஆவர். அருணகிரிநாதர், ஆண்ட இந்துஸ்தான் சொற்கள் சலாம், சபாஷ் என்பன. சலாம், சபாஷ் என்னும் இரண்டு சொற்களைச் சுவாமிமலைத் திருப்புகழில்,

“சுராதிய திமாலய னுமாலொடு சலாமிடும்
சுவாமிமலை வாழும் பெருமாளே.”

என்றும் “சபாஷ்” என்னும் மொழியினைக் திருநள்ளாற்றுத் திருப்புகழில்.

“கற்ப கங்திரு நாடுயர் வாழ்வுறச்
சித்தர் விஞ்ஞையர் மாகர் சபாசென
கட்ட வெங்கொடு சூர்கிளை வேரற
விடும்வேலா”

என்றும் அமைத்துப் பாடியுள்ளார்,

குமரகுருபர சுவாமிகள் தம் முத்துக்குமார சுவாமிப்பிள்ளைத் தமிழில் சலாம் என்னும் இந்துஸ்தான் கிளவியினைப் பயன் படுத்தியுள்ளார். அதுவே,