106
திருச் சபையில் சேர்ந்து, அயல் நாட்டினர்க்கு அத் திருச் சபையின் சன்மார்க்க போதனைகளைப் பரப்பி, சமயப் பணி ஆற்றுவதிலேயே பேரூக்கங் காட்டி வந்தார்.
இவர் தம் பதினெட்டாம் வயதில், ரோமாபுரிக் கத்தோலிக்கப் பாதிரிமார்களின் சமயச் சங்கத்தில் சமயப் பயிற்சியின் பொருட்டுச் சேர்ந்தார் ; அங்கு இரு ஆண்டுகள் சமயப் பயிற்சியை நன்கு தெளிவுறப் பயின்றார். பின்பு இலக்கண ஆசிரியராய் இருந்தார். மூன்று ஆண்டுகள் தத்துவ ஞானம் என்னும் சாஸ்திரத்தைப் பயின்று தேர்ச்சியுற்றார்: பல நாட்டுப் பல்வேறு மொழிகளையும் கசடறக் கற்றார் , சமயாசார சாஸ்திரத்தின் நுட்பங்களைத் தெளிவுறப் பயின்று அதிலும் நல்ல புலமை பெற்றார் : இவ்வாறு சமய நுட்பங்களை நன்கு பயின்றதனால் இவர் சமய குருவானார். இவர் கிறித்துவ மதத்தில் கொண்டுள்ள பற்றையும், சமயப் பணியாற்றுவதில் அன்னாருக்கிருக்கும் தீவிர ஆர்வத்தையுங் கண்ட ரோமாபுரிக் கத்தோலிக்கக் குருமார்கள் உவப்புற்று, அயல் நாடுகளில் சமயப் பணி புரிவதற்குரிய தகுதி வாய்ங்தவர்களுள் வீரமா முனிவரையும் ஒருவராகத் தேர்ந்தெடுத்தார்கள். கரும்பு தின்னக் கூலி கிடைத்தாற்போன்று, கிறித்தவ மதத்தைப் பிறநாட்டு மக்களிடம் பரவச்செய்ய இரவும் பகலும் சிந்தித்தவாறு இருந்த வீரமா முனிவர், குருமார்களின் கருத்தை அறிந்ததும், நடுக்கடலில் திசை காணாத நிலையில் திசை கண்ட மாலுமியைப் போன்று மனமகிழ்ச்சியுற்று, சமயப் பணி புரியும் அந்நன்னாளை ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருந்தார்.
கி. பி. 1706-ஆம் ஆண்டு வீரமாமுனிவர் தம் தாய் நாடாகிய இத்தாலி தேசத்திலிருந்து புறப்-