பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

107

 பட்டுப் போர்த்துகீசியக் கப்பலில் இந்தியாவிற்குப் புறப்பட்டார் : செப்டம்பர் மாதம் போர்த்துகீசிய நாடாகிய கோவாத் துறைமுகத்தை யடைந்தார். அவ்வாண்டில் ரோமக் கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து சமயத் தொண்டாற்றும் பொருட்டுத் தமிழ்நாட்டிற்கு வந்த சமய குருமார்களின் முதன் முதலாக வந்தவர் வீரமா முனிவரே யாவார் : அங்கிருந்து கொச்சித் துறைமுகத்தையடைந்து, கப்பலினின்றும் இறங்கினர் அங்குச் சில நாட்கள் ஒய்வு எடுத்துக் கொண்ட பின்பு கடற்கரையோரமாகவே யாத்திரை செய்துகொண்டே அம்பலக்காடு என்னும் இடத்தை அடைந்தார். மதுரைக் கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த வீரமா முனிவர் திருநெல்வேலி ஜில்லாவைச் சேர்ந்த புதுப்பட்டி, குருக்கல்பட்டி முதலிய இடங்களில் சில தினங்கள் இருந்தார். பின்பு வீரமாமுனிவர் சுமார் இரண்டு ஆண்டுகள் திருநெல்வேலி ஜில்லாவில் வடக்கன் குளத்திலும், காமையநாய்க்கன்பட்டியிலும் பாதிரியாராய் இருந்து சமயப் பணியை ஆரம்பித்தார். இவ்விடங்களில்தாம் இவர் தம்மை வீரமா முனிவர் எனத் தம் பெயரை அமைத்துக்கொண்டனர். அது காறும் தாம் அணிந்திருந்த கருப்பு உடைகளைக் களைந்துவிட்டு, தமிழ்நாட்டு துறவிகளைப்போன்று காவி உடைகளை உடுத்திக்கொண்டும், தலையில் பாகை அணிந்துகொண்டும், கால்களில் மிதியடி அணிந்துகொண்டும், கையில் கோல் பிடித்துக் கொண்டும் சமயப் பணி ஆற்றிவந்தார், முனிவர் எவ்விடத்திற்குச் சென்றாலும் சீடர்கள் பலர் தம்மைச் சூழ்ந்து வரப் பல்லக்கில் அமர்ந்து செல்வார். இப் பல்லக்குப் பிரயாணம் அருகிலுள்ள பல சிற்றூர்களுக்குச் சென்று, சமயத் தொண்டு ஆற்ற இவருக்கு மிகவும் பேருதவியாயிருந்தது. தமிழ் நாட்டுத் துறவிகளைப் போன்று எப்பொழுதும்