பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

 இயேசுநாதரின் சன்மார்க்க போதனைகளை இனிய தமிழல் உபதேசித்தார்; ஆங்காங்குத் தேனினுமினிய தமிழ்மொழியில் சமய நன்மார்க்கங்களைப் புற்றிய சொற் பொழிவுகளை ஆற்றினார். அன்னாரது சொற்பொழிவுகள் மக்களின் மனத்தைப் பிணித்தன. ஆகையினால், அவரது இனிய சமய விளம்பரங்களில் ஈடுபட்டுப் பலர் கிறித்தவர்களானர்கள். சுற்றுப்புறங்களிலிருந்து மக்கள். தங்கள் மனைவிமக்களுடன் கால் நடையாகவே குருக்கல்பட்டிக்கு வந்து, முனிவரின் எழில் உருவத்தைக் கண்டு வணங்கிப் பெரியாரிடம் உபதேசம் பெற்று, பேரானந்தத்துடன் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றார்கள். இவ்வாறு சிலவாண்டுகள் முனிவர் அவண் வாழ்ந்த கிறித்தவ மக்களுக்குச் சற்குருவாக இருந்து, அவர்களுக்கு நற்போதனைகள் பலவற்றைப் போதித்துவந்தார்.

தஞ்சை மாவட்டத்தில் வீரமா முனிவர் சமயப் பணி ஆற்றிக்கொண்டு வருகையில் திடீரென்று அவருக்கு ராஜ பிளவு என்னும் பெருங் கட்டி ஒன்று முதுகில்தோன்ற, அதன் காரணமாகப் படுக்கையில் நாற்பதுநாள் இருந்து மிகவும் துன்பமடைந்தார். அவ்வமயம் பக்கத்தூர்களிலிருந்து இரண்டு பாதிரிமார்கள் வந்து, முனிவரின் தினசரி அலுவல்களைக் கவனித்து, அவருக்குப் பதிலாகச் சமயப் பணி ஆற்றிவந்தனர். சில நாட்களில் முனிவர் குணமடைந்து தம் பணியை மேற்கொள்ளத் தொடங்கினர். ஆனால், மீண்டும் அக்கட்டியினல் அவர் பாதிக்கப்பட்டு, சிகிச்சையினிமித்தம் புதுச் சேரிக்குச் சென்றார், அங்குச் சில தினங்கள் தங்கிப் பூரண சுகமுற்றதும், புதுச்சேரியினின்று புறப் ட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வடுகர் பட்டிக் கிராமத்திற்குச் சென்று, அங்குச் சில நாட்கள் உறைவாராயினர்.