பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

127

 குடிப் பிறப்பு, செல்வம், கல்வி இவற்றால் இறுமாப்புத் கொண்டிருப்பர். பெரியோர்களோ செல்வம் கல்வி முதலியவற்றையுடையாாய் இருப்பினும், செருக்குருது என்றும் அடங்கி இருப்பர்.

குடிமையும், செல்வமும், கல்வியும் சிறியார் இடத்தில் இருக்குமானல், அவற்றால் தருக்கு அடைவரே அன்றி, வேறு பெருமையுடையர் ஆகார். அவற்றைக் கொண்டு தகாதனவற்றையே செய்வர். ஆனால், இச் செருக்கு, குடிப்பிறப்பாலும், செல்வ வளத்தாலும், கல்வி மேம்பட்டாலும் நிறைந்த பெரியாரிடத்தில் என்றென்றும் காணப்படாது. அவர்கள் எக்காலத்தும் தாழ்ந்தே போவர். சிறியவர்களோ மேலே கூறப் பட்டவற்றைப் பெற்ற காரணத்தால் தம்மை வியந்து பெருமையாகப் பேசிக்கொள்வர். இவ்வாறான பெரியார் சிறியார் இயல்புகளை மதிலின் மீதும் அகழியின் மீதும் வைத்துத் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் கற்பித்துக் கூறிய கற்பனையைக் கற்றறிந்தால், நாம் கழி பேர் உவகை கொள்வோம் என்பதில் ஐயம் இல்லை.

தாழ்ந்தோர் உயர்வர் என்றுமிக
உயர்ந்தோர் தாழ்வர் என்றுஅறம்
சூழ்ந்தோர் உரைக்கும் உரைகண்டாம்
மதில்சூழ் கிடந்த தொல்அகழி
தாழ்ந்தோர் அனந்தன் மணிமுடிமேல்
நின்றன் றுயர்ந்து தடவரையைச்
சூழ்ந்தோர் வரையில் உதிப்பவன்தாள்
கீழ்நின் றதுபோய்ச் சூழ்எயிலே

என்பதே அவரது பாடல்

பெரியவர்கள் பணிந்து போவர் என்பதற்கு மற்றோர் எடுத்துக்காட்டினாலும் விளக்கலாம். புலிக்கால் முனிவரின் திருமகனார் உபமன்யு முனிவர். அவர், தம்மைப் பல இருடிகள் சூழக் கையிலையில் ஒரு சார்