பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

 வீற்றிருந்தார். அப்போது சுந்தரர் மண்ணுலகு விடுத்துக் கைலைக்கு எழுந்தருளினர். இங்ங்னம் அவர் வருதுலேக்கண்டஉபமன்யு முனிவர்தம்இரு கரங்களையும் சிரமேல் குவித்துச் சுந்தரரைத் தொழுது நின்றார். ஆனால், ஏனையவர் தொழுதிலர். காரணம் பெருமை என்றும் பணியும்; சிறுமை தன்னை வியந்து தருக்கும் அன்றோ ?

"நாவலர் வெள்ளானை நடத்தஉப மன்னியர்போல்
ஆவலுடன் கண்டுபணிங் தார்களோ"

என்ற திருத்தொண்டர் வெண்பாப் பாடலைப் படித்தால், இக்கருத்து நன்கு விளங்கும். ஆகவே, பெருமைக் குணமுடையவர் செருக்கு இன்றி இருப்பர். ஆனால், சிறுமைக்குணம் உடையவர் செருக்குடன் வாழ்வர். இதனால் குலத்தாலும் செல்வத்தாலும் பெரியராயினர்தாம், பெரியார் என்று எண்ணுதல் வேண்டா,

நற்குடி பிறவா மாந்தர் இவர் என்பதை அவர்களின் செருக்குற்ற மனப்பான்மையால் எளிதில் அறியலாம். "சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின் அறிவ" என்ற முதுமொழிக்காஞ்சி நூலால் இதனை உணரலாம்.

ஆக்கம் பெரியார் சிறியார் இடைப்பட்ட
மீச்செலவு காணின் நனிதாழ்ப-துக்கின்
மெலியது மேல்மேல் எழச்செல்லச் செல்ல
வலிதன்றோ தாழும் துலைக்கு

என்கிறது நீதி நெறி விளக்கம்.

சிறியாரிடத்து மற்றொரு குற்றமும் உண்டு, என்றும் பிறருடைய குற்றங்களையே பிறரிடம் கூறித் திரிவர். ஆனால், பெருமைக்குணம் நிறைந்த பெருங்குடி மக்கள் பிறருடைய குற்றத்தையும் மறைத்தே பேசுவர். பிறருடைய நற்பண்பையே எடுத்துப் மொழிவர்.