பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

காள் கேண்மின்களோ, மூக்கே நீ முரலாய், வாயே வாழ்த்து கண்டாய், நெஞ்சே நீ நினையாய், கைகாள் கூப்பித்தொழிர், ஆக்கையால் பயன் என்?”, கால்களால் பயன் என்?, என்று அருளிச்செய்தனர். இங்ங்னமெல்லாம் பாட இடங் கொடுத்தது “கோளில் பொறியில் குணம்இலவே எண்குணத் தான், தாளை வணங்காத் தலை” என்ற வள்ளுவர் வாக்கே அன்றி வேறு வாக்கு உண்டோ ?

வள்ளுவர் முக்காலமும் உணர்ந்த மூதறிஞர். வருங்காலத்தில் கடவுள் உணர்ச்சி சிறிது குறைவு படும் போலும் என்று ஒர்ந்து உணர்ந்துள்ளார். அவ்வுண்ர்ச்சிக்குக் காரணம் கல்வியின் முதிர்வு என்றுகூடச் சிந்தித்துள்ளார். அன்னார் அச்சிந்தனை காரணமாகவே கல்வி அறிவால் முதிர்ந்தவர்கள் மாட்டுக் கருணை வைத்து, அவர்கட்குக் கடவுள் உணர்ச்சியினைப் புகட்ட வேண்டுமென்று, “கடவுள் திருவடியினைத் தொழாதுபோயின், கற்றுப்பயன் இல்லை” என்று கூறியருளினர். அங்கும் ஒரு நயம் தோன்ற அவ்வுண்மையைக் கூறியருளினர். கற்றவர்கள் தம் கல்வியின் அறிவைப் பெரிதாகவும், குற்றம் குறையற்றதாகவும் கருதிக் கடவுள் உணர்ச்சி குறைந்துள்ளார். ஆனால், அவர்களின் கல்வி அறிவு, இறைவன் அறிவின் முன் தாழ்வுடையது; தூய்மை அற்றது. இந்த உண்மையினை வலியுறுத்தவே இத் தருணத்தில் இறைவனை வேறு எந்தச் சொல்லாலும் குறிப்பிடாமல் “வால் அறிவன்” என்றே கூறிய மாண்பினை என்னென்றுவியப்பது!

கற்ற தனால் ஆய பயன் என்கொல் வால்அறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

என்று வள்ளுவர் திருவாய் மலர்ந்த குறட்பாவிற்கு விளக்கம் காட்டுவார் போன்று, சேக்கிழார் பெருமானார்,