13
ஹெரேஷியஸ் வால்போல், கூப்பர் போன்றவர்களின் கடிதங்கட்கு எட்டுணையும் பின் வாங்குதலின்றிச் சிறப்புடையனவாக உள்ளன. “கடிதம் எழுதுவது ஒர் ஒப்பற்ற அருங்களையாகும்,” என்று செஸ்டர்பீல்டு தன் மகன் பிலிப்புக்கு அறிவுறுத்தியிருக்கும் கருத்தை நம்மவர்கள் பன்னூறு ஆண்டுகட்கு முன்பே நன்கறிந்தவர்கள் என்பதில் ஆசங்கை எழ இடமில்லை.
இக்காலத்தில் கடிதம் எழுதும் முறைளைக் கண்டு அவை மேனாட்டு அறிஞர்களின் போக்கைத் தழுவி எழுதப் படுகின்றன என்று கூறி வியப்புறுகின்றவர் ஒரு சிலர். அதாவது, மேற்கு நாட்டவர் தாம், கடிதம் எங்கிருந்து வருகின்றது என்பதை அறிவிக்க, முன்னர் வருகையினைக் (From) குறித்துப் பின்னர் இக்கடிதம் இன்னாருக்கு (To) எழுதப்படுகிறது என்பதையும் குறிப்பிட்டு, அதன் பின்னர்ச் செய்திகளை (Subject matter) அறிவிக்கின்றனர் என்று கூறிப் பெருமிதம் கொள்கின்றனர். இம் முறைகளை நம் செந்தமிழ்மொழியினரும் உணர்ந்திருந்தனர் என்பதை நன்கு விளக்க நம் பதினோராம் திருமுறைக்கண் முதலில் விளங்கும் திருமுகப் பாசுரத்தினைத் துணையாகக் கொள்வோமாக. அப்பாசுரம்,
மதிமலி புரிசை மாடக் கூடல்
பதிமிசை நிலவும் பால்கிற வரிச்சிறகு
அன்னம் பயில்பொழில் ஆல வாயில்
மன்னிய சிவன்யான் மொழிதரும் மாற்றம்;
பருவக் கொண்மூஉப் படியென பாவலர்க்கு
உரிமையின் உரிமையின் உதவி, ஒளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்கும் சேரலன் காண்க.
பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்
தன்போல் என்பால் அன்பன்; பண்பால்
காண்பது கருதிப் போந்தனன்.
மாண்ப்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.