உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

என்பது. இது திருவாலவாயுடையாரால் சேரமான் பெருமாண் நாயனாருக்குப் பாணபத்திரரது வறுமை தீரப் பொருள் கொடுக்கச் செய்யுள் வடிவில் எழுதப்பட்ட கடிதமாகும். இக்கடிதத்தில் “மதிமலி...சிவன் யாம்” என்பது வரையில் இன்னாரிடமிருந்து இது வருகிறது என்பதும், பருவக் கொண்மூ....சேரன் காண்க” என்பது வரையில், இன்னாருக்கு எழுதப் படுகிறது என்பதும், “பாண்பால் யாழ்பயில்... வரவிடுப்பதுவே” என்பது வரையில், எழுதப்படும் செய்தி இன்னது என்பதும் எத்தனை அழகாக பொறிக்கப் பட்டுள்ளன என்பதை நாம் நினைந்து பார்க்குங்கால், தமழ்மொழியின் இலக்கிய நுட்ப அமைப்பின் முறைமை நன்கு புலனாகின்றதன்ரறோ? செஸ்டர்பீல்டு தம் திருமகனான பிலிப்புக்கு எழுதிய கடிதத்தில் “கடிதம் எழுதுவது ஒர் அருங்கலை” என்று கூறியது உண்மைதான் என்பதை இத்திருமுகப் பாசுரங் கொண்டே நன்கு உணரலாம்.

இப்பாசுரம் பேரறிவுப் பொருளாய் விளங்கும் இறைவரால் எழுதப்பட்டது என்பது தொன்று தொட்ட முடிவாகும். இறைவரோ, “பேரறிவே, இன்பப் பெருக்கே பராபரமே” என்று தாயுமானார் வாக்கிற்கும், “சிறந்த அறிவு வடிவமாய்த் திகழும் நுதற்கண் பெருமானே!” என்ற சிவப்பிரகாசரது மொழிக்கும் பொருளாய் விளங்குபவர். அத்தகைய பேரறிவுப் பிழம்பாகிய இறைவரால் பாடப் பெற்ற இத்திருமுகப் பாசுரம் சொல்நோக்கும், பொருள் நோக்கும் மற்று எந்நோக்கும், கொண்டு இலங்குவது என்பதைக் கூறவும் வேண்டுமோ? இத்திருமுகப் பாசுரத்தினைத் தொடங்கும் பொழுதே இறைவனார் “மதிமலி புரிசை” என்று தொடங்கி மதுரையின் மதிலின் மாண்பைப் புலப்படுத்தத் தொடங்குகிறார் அல்லரோ? மதுரையின் மதில் பல மாட்சிமைப்பட்ட அறிஞர்களின் அறிவுக் கூறு-