பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4. திருக்கோவையார்

தோற்றுவாய்

தமிழ் மக்கள் தம் வாழ்வை இருகூறாக வகுத்துக் கொண்டனர். அவையே, அகவாழ்வு புறவாழ்வு என்பன. புறவாழ்வில் அறம், பொருள், வீட்டின் பாகுபாடுகள் விளக்கப்பெறும். அகவாழ்வில் இன்பப் பகுதியே இயம்பப்படும். அகம் எனும் சொல்லே இன்பம் என்னும் பொருள் தந்து நிற்குமாயின் வேறு கூறுவானேன்?

கோவையின் இலக்கணம்

அகமாகிய இன்பத்தை விளக்க எழுந்த இலக்கணங்களும், இலக்கியங்களும் பலவாகும். அவற்றுள் கோவை என்னும் நூலுக்கு இடனுண்டு. தமிழ்மொழியில் உள்ள தொண்ணூற்றாறு வகையான பிரபந்தங்களுள் ஒன்று கோவையென்பது. இக்கோவை அகப்பொருள் பற்றிக் கூறுவதனால் இஃது அகப்பொருள் கோவை என்றே கூறப்பெறும். இதனை எவ்வாறு பாடுதல் வேண்டும் என்பதை இலக்கணமுகத்தான் அறிய வேண்டின்,

“முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் முகந்து
களவு கற்பெனும் வரைவுடைத் தாகி
நலனுறு கலித்துறை நானூற் றாக

கூறுவ தகப்பொருள் கோவை ஆகும்.”

என்ற இலக்கணவிளக்க நூற்பாவால் நன்கு அறியலாம்.

கோவையால் அறியக்கிடப்பன

கோவை நூல்களிலிருந்து தமிழ்நாட்டுத் திருமண முறையை ஒருவாறு உணரலாம். கோவையின் பொருட் சுருக்கம் பின்வருமாறு, ஒருவன் தன்