பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தோழனோடு சோலைவழியே வருவான். அவ்வாறே ஒருத்தி தன் தோழியோடுசோலையில் பூக்கொய்யவும் புனல் விளையாடவும் வருவாள். அவள் தனித்து இருக்கையில் தலைமகன் கண்டு காதலிப்பான். இவருைைடய மனமும் இயைந்து ஒன்றுபடும். இந்த நிகழ்ச்சி சில நாள் பிறர் அறியாமல் நிகழப் பின் தோழி அறிவாள். அவள் துணையால் சிலநாள் தலைவன் தலைவியர் கூடி மகிழ்வர். தலைவியின் வேறுபாட்டை அறிந்த தலைவியின் உறவினர் தோழியை வினவத் தோழி தலைவிக்கு ஏற்பட்ட காதல் நிகழ்ச்சியைப் புனல்தரு புணர்ச்சியாலும், பூத்தரு புணர்ச்சியாலும், களிறுதரு புணர்ச்சியாலும் உறவினர்க்கு உணர்த்துவள். அதனால், சுற்றத்தினர் தலைவியை வெளியில் ஏகாதவாறு தடுப்பர். இத்தடையால் தலைவன் தலைவியைத் தோழியின் துணையால் தன்னூருக்கு அழைத்துச் செல்வான். அங்கு மணத்தை முடிப்பன். மீண்டும் மணமகள் இல்லம் திரும்புவான். பெற்றோர் அவனுக்கே அவளை ஈந்துவிடுவார். இருவரும் இல்லறத்தை இனிது நடத்துவர். மக்கட் பேற்றை மாணுறப்பெற்று இன்பம் கர்வர்.

இன்னோரன்ன நிகழ்ச்சிகள் கோவையாகச் சொல்லப்படுதலின், இது கோவை என்னும் பெயரைப் பெற்றது. இதுகாறும் கூறிப்போந்தவை கோவையின் பொதுத்தன்மைகளாகும். இனி நாம் எடுத்துக்கொண்ட பொருளாகிய திருக்கோவை யாரைப்பற்றிக் கூறுவோமாக. திருக்கோவையார் என்பது திருவாதவூரரால் பாடப்பட்ட கோவை நுலாகும்.

திருக்கோவையார் மாண்பு

தமிழில் உள்ள கோவைகள் யாவும் யார் மீது பாடப்படுகின்றனவோ, அவர்கள் பெயரையொட்டியும், எத்தலத்தின் மீது பாடப்படுகின்றனவோ அத்தலத்தின் பெயரைச் சார்ந்தும் வழங்கப்பெறும். முறையே