37
‘நுண்ணறிவுடைய நூலொடு பழகினும் பெண் ணறிவென்பது பெரும் பேதைமைத்து’ என்று கூறிப் பெண்ணுலகத்திற்கு ஒரு பழியைப் பிற்பட்டவர் ஏற்படுத்தியுள்ளார். அவ்வாறு நாம் கருதுதற்கில்லை. அவர்களும் ஆண்களைப்போலவே பேர் அறிவு படைதவர். சொல்லாற்றலோடு பேசவல்லவர். அவர்கள் பேச்சுத்திறன் மிகமிக வியக்கத்தக்கதாக இருக்கும். இதனைத் திருக்கோவையாரைப் படிப்பின் உணரலாம். தலைமகன் தலைவியைத் தான்கூடி வாழ வாய்ப்புக் கிடைக்காவிடின், மடல்ஏறித் தற்கொலை புரிந்து கொள்வதாகத் தோழியிடம்மொழிவான். மடல் என்பது பனையோலையாலும் மட்டையாலும் செய்யப்படும் குதிரைமீது தலைவன் ஏறித் தலை மகள் பால்கொண்ட தணியா வேட்கையைத் தோற்றுவிப்பதாகும். இத்தகைய குதிரையைச் செய்ய வேண்டுமானால் பனை ஓலையையும் மட்டையையும் மரத்திலிருந்து வெட்டி எடுத்தல்வேண்டும். பொதுவாகப் பறவைகள் பனை மரத்தில் கூடுகட்டி வாழும் இயல்பின.
இந்நிலையில் தோழி தலைவன் எண்ணியுள்ள மடல் ஏறும் எண்ணத்தை நீக்கவேண்டியவளாய், ‘மடல் ஏறற்க’ என்று மொழியினும், அவன் தலை மகள்பால் வைத்த காதல் மிகுதியால் அவ்வெண்ணத்தை நீக்க மாட்டான். இதனை எந்தமுறையில் எடுத்து இயம்பினால், அவன் மடல் ஏறுதலைத் தடுக்க இயலும், என்பதைச் சிந்தித்துத் தன் பேச்சுத்திறனால் அதனை விலக்க முன் எழுந்த தோழியின் பேச்சு வன்மையை என் என்பது.!
தோழி தலைவனைட்பார்த்து, ‘ஐயா! நீ மடல் ஏறத் துணிந்தனை. அம்மடற்கு வேண்டிய ஓலையும் மட்டையும் மரத்தில் இருந்து எடுக்கப்பட வேண்டியவை. அப்படியே எடுப்பின, அம்மரத்தில் கூடு